குழப்பத்தின் மொத்த உருவம் ஜெ.: கருணாநிதி
சென்னை:
காவிரிப் பிரச்சனை தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்தக் குழப்பத்திற்கும் முதல்வர் ஜெயலலிதாதான் காரணம் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் கருணாநிதி கூறுகையில்,
காவிரி விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே ஜெயலலிதா வித்தியாசமான அணுகுமுறையைத் தான் கையாண்டுவருகிறார்.
ஒன்று- பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முயல வேண்டும். அல்லது, சட்டரீதியிலானநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் இரண்டையும் கையில் எடுத்துக் கொண்டு அனைவரையும் ஜெயலலிதா குழப்பி வருகிறார்.
இவ்விவகாரத்தில் பக்கத்து மாநில (கர்நாடகம்) முதல்வரை நாகரிகமில்லாமல் பேசி வருவதும் ஜெயலலிதா செய்தகுழப்பத்தில் ஒன்று.
தேவையே இல்லாமல் கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவர்தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்தார். இதன் மூலம் மற்ற மாநில அரசில் குழப்பம் ஏற்படுத்தவும் ஜெயலலிதாமுனைந்துள்ளார்.
மேலும் காவிரி விவகாரத்தில் எதிர்க் கட்சிகளே தேவையில்லை என்று முதலில் ஜெயலலிதா அறிவித்து விட்டு,பின்னர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் அவர் கூட்டியது அவருடைய அடுத்த குழப்பம்.
கடந்த 1967ம் ஆண்டிலிருந்தே காவிரிப் பிரச்சனை தொடர்பாக நான் பேசி வந்துள்ளேன். எனவே இந்தவிவகாரம் தொடர்பாக என்னிடம் தொலைபேசியிலாவது தொடர்பு கொண்டு ஜெயலலிதா பேசியிருக்கலாம்.ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
கர்நாடக அரசும் இத்தனை பிடிவாதமாக இருக்கக் கூடாது. உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நதி நீர் ஆணையத்தின்உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து தமிழகத்திற்கு நீரைத் திறந்து விட வேண்டும் என்றார் கருணாநிதி.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications