மேட்டூர் அணை நீர்மட்டம் மளமள குறைவு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகு வேகமாகக் குறைந்து வருகிறது.
கர்நாடகத்திலிருந்து சுத்தமாக தண்ணீர் வரத்து நின்று போய் விட்டதால் அணைக்கு வரும் நீரின் அளவும் மிகவும்குறைந்து விட்டது.
காவிரிப் பாசனப் பகுதியில் பெய்த லேசான மழை காரணமாக ஓரளவு தண்ணீர் வந்தது.
தற்போது அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 6,283 கன அடி நீர் வருகிறது.அணையிலிருந்து விநாடிக்கு 9,975 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
கர்நாடகத்திலிருந்து தண்ணீர் வருவது மீண்டும் தொடங்காவிட்டால் அணையின் நீர் இருப்பு மேலும் மோசமாகிவிடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications