கெட்டவார்த்தை எம்.எல்.ஏவை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்
மதுரை:
காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரியில் ரவுடிகளுடன் புகுந்து கலாட்டா செய்த திருப்பத்தூர் அதிமுக எம்.எல்.ஏ.உமாதேவனைக் கண்டித்து காரைக்குடி, மதுரை மற்றும் தஞ்சாவூர் அரசுக் கல்லூரிகளின்ஆசிரிய-ஆசிரியைகளும், மாணவ-மாணவிகளும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆசிரியர்களும்மாணவர்களும் போராட்டம் நடந்தி வருகின்றனர்.
இதையடுத்து கல்லூரிகளை எப்படியாவது திறக்க வைத்துவிட வேண்டும் என்று அதிமுக தொடர்ந்து முயற்சித்துவருகிறது. காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரியை மீண்டும் இயங்க வைப்பதற்காக திருப்பத்தூர் அதிமுகஎம்.எல்.ஏவான உமா தேவன் தனது அடியாட்களுடன் கடந்த 19ம் தேதி சென்றார்.
அதிமுகவினர் மற்றும் ரவுடிகளுடன் அழகப்பா கலைக் கல்லூரிக்குச் சென்ற உமா தேவன், அங்கிருந்த கல்லூரிமுதல்வர் சுப்பிரமணியக் கவிராயரை மிகவும் மோசமான கெட்ட வார்த்தைகளால் திட்டினார். அவரைக்கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார்.
இதையடுத்து அன்று முதல் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதி கல்லூரி ஆசிரியர்கள்போராட்டம் நடத்தி வருகின்றனர். உமாதேவன் மீது நடவடிக்கை எடுக்கவும் உடனடியாக வழக்குத் தொடரவும்கோரி போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உமாதேவனைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்நடைபெற்றன.
நீண்ட கால விடுறைக்குப் பிறகு இன்று (திங்கள்கிழமை) தான் மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரிதிறக்கப்பட்டது. ஆனால் கல்லூரி திறக்கப்பட்ட நிலையில், ஆசிரியைகள் அனைவரும் கல்லூரிவளாகத்திற்குள்ளேயே நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மீனாட்சி கல்லூரி மாணவிகளும் இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் காரைக்குடி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவியரும் இன்று போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே அழகப்பா கல்லூரி முதல்வரைத் திட்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரும் 25ம் தேதி காரைக்குடியில் அனைத்து அரசுக் கல்லூரி ஆசிரியர்களும் ஒன்று கூடி பேரணி நடத்துவதுஎன்றும் பின்னர் அக்டோபர் 3ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு முக்கியப் போராட்டங்களுக்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால், கடைசியில் வரும்அக்டோபர் 8ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications