ரத்தாகிறது இலவச மின்சாரம்: விவசாயிகளுக்கு "ஷாக்"
சென்னை:
கடந்த 3 ஆண்டுகளுக்கான மின் கட்டண பாக்கியைச் செலுத்துமாறு விவசாயிகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை விலக்கிக் கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இலவச மின்சாரத் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக தமிழக விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது, நிதி நிலைமை மோசமாக இருப்பதால் பல திட்டங்களோடு சேர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத் திட்டமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதற்கு விவசாயிகளும் பல எதிர்க் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதை தமிழக அரசு அப்போதைக்கு வாபஸ் பெற்றுக் கொண்டது.
இந்நிலையில் தமிழக அரசின் மின்வாரியம் சமீபத்தில் விவசாயிகளுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. கடந்த 1999ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையிலான கால கட்டத்திற்கு, ஒரு ஹார்ஸ் பவர் உள்ள பம்ப் செட்டுகளுக்கு தலா ரூ.250 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், மூன்று ஆண்டுகளுக்குரிய கட்டணத்தை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இனிமேல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.125 வீதம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச மின்சாரத் திட்டத்தை தமிழக அரசு விலக்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications