காவிரி விவகாரம்: காங்கிரஸ் மீது பா.ஜ.க. பாய்ச்சல்
சென்னை:
காவிரி ஆணையக் கூட்டத்தில் வேண்டுமென்றே அரசியலைப் புகுத்தி தமிழகத்திற்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய நீரின் அளவைக் காங்கிரஸ் கட்சி தான் குறைக்க வைத்து விட்டது என்று தமிழக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக துணைத் தலைவரான வைத்தியலிங்கம் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
கடந்த 8ம் தேதி காவிரி ஆணையக் கூட்டம் டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் கேரள முதல்வர் ஆன்டனியும் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியும் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்த இரு முதல்வர்களும் அன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ்தலைமையால் வற்புறுத்தப்பட்டனர்.
தமிழகத்திற்கு ஆதரவாக அந்த இரு முதல்வர்களும் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் அன்று காவிரிஆணையக் கூட்டமே நடந்திருக்காது. அவர்களும் கலந்து கொண்டதால் வேறு வழியில்லாமல் பிரதமரும்ஆணையத்தைக் கூட்டி, தமிழகத்திற்கு தினமும் 0.8 டி.எம்சி. நீரை வழங்குமாறு கர்நாடக அரசுககு உத்தரவிட்டார்.
ஆனால் கடந்த 3ம் தேதி தான் தமிழகத்திற்கு தினமும் 1.25 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வாறு காங்கிரஸ் முதல்வர்களை ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ள வைத்ததன் மூலம் தமிழகத்திற்குதினமும் 0.7 டி.எம்.சி. நீர் குறைவாகக் கிடைக்க காங்கிரஸ் வழி செய்துவிட்டது.
காங்கிரஸ் முதல்வர்கள் இந்த ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமலிருந்தால் இந்த நீர்க் குறைப்பைத்தவிர்த்திருக்கலாம். எனவே இதற்கு முழுக்க முழுக்க காங்கிரஸ் தான் காரணம்.
கடந்த வாரம் காவிரிப் பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளாததன் மூலம் திமுக தன் மன வருத்தைத் தான் வெளிக் காட்டியுள்ளதே தவிர வேறு ஒன்றும் இல்லை.
பெங்களூரில் இன்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது சரி தான்.கர்நாடகம் மீதான தமிழக அரசு தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரைகாவிரி ஆணையம் பொறுத்திருப்பது தான் நல்லது என்றார் வைத்தியலிங்கம்.
-->
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications