தொடர்கிறது அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சென்னை:
பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகளை இணைப்பதை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக சில கல்லூரிகளில்ஆசிரியர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதை எதிர்த்து அரசுக் கல்லூரி மாணவர்கள்வேலைநிறுத்தம் செய்துவருகிறார்கள். கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு திறக்கப்பட்ட பின்னரும் தீவிரமாகபோராடி வருகிறார்கள்.
இந்நிலையில் காரைக்குடி அரசுக் கல்லூரி முதல்வரை அதிமுக எம்.எல்.ஏவான உமா தேவன் மிரட்டியதைக்கண்டித்தும் சில கல்லூரிகளில் ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீதுநடவடிக்கை எடுக்காவிட்டால் அக்டோபர் 8ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்ஈடுபடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நலையில் சென்னை ராணி மேரிக் கல்லூரி, மதுரை அரசினர் மீனாட்சி மகளிர் கல்லூரி உள்ளிட்டபெரும்பாலான அரசுக் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் இன்று வகுப்புகளுக்குச் செல்லாமல் புறக்கணித்தனர்.
பின்னர் அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள்ளாகவே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களுக்குஆசிரியைகளும் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இதற்கு முன் போராட்டம் நடத்திய பல மாணவர்களைப் போலீசார் கைது செய்ததை எதிர்த்தும், அம்மாணவர்கள்மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெறக் கோரியும், மாணவர்களைத் தாக்கிய போலீசார் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் இன்று போராட்டம் நடத்துவதாக ராணி மேரி கல்லூரிமாணவிகள் தெரிவித்தனர்.
-->












Click it and Unblock the Notifications