"ஜெ. முதல்வராக இருக்கும் வரை காவிரி பிரச்சினை தீராது"
சென்னை:
ஜெயலலிதா தமிழக முதல்வராக இருக்கும் வரை காவிரிப் பிரச்சினை தீரவே தீராது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளரான அனில் சாஸ்திரி கூறினார்.
மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவராக இருந்த ஜி.ஏ. வடிவேலு, இக்கட்சியின்தமிழகப் பிரிவைக் கலைத்து விட்டு சுமார் 1,000 ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார்.
சென்னை காமராஜர் அரங்கில் நடந்த இந்த நகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அனில் சாஸ்திரி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
காவிரிப் பிரச்சினை போன்ற நெருக்கடியான, சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேகத்தை விடவிவேகம், சாதுரியம், ராஜதந்திரம் அவசியம். அவை யாவும் ஜெயலலிதாவிடம் இல்லை.
என்னைப் பொருத்தவரை, ஜெயலலிதா தமிழக முதல்வராக இருக்கும் வரை காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவே முடியாது. இது எனது தனிப்பட்ட கருத்து என்றார் அனில் சாஸ்திரி.
காங்கிரசை தாக்கும் சமூக நீதிக் கட்சி:
இதற்கிடையே காவிரிப் பிரச்சினைக்காக தீவிரமாக பாடுபட்டு வரும் ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியின் அனில்சாஸ்திரி விமர்சித்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று சமூக நீதிக் கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியன்கூறினார்.
இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. காவிரிப் பிரச்சினையில் மக்கள் நலன் குறித்து அக்கறையே காட்டாதகருணாநிதியும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து ஜெயலலிதா ஆட்சியை அசைக்கப் பார்க்கிறார்கள். அது நடக்காதுஎன்றும் ஜெகவீரபாண்டியன் கூறினார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications