நாட்டார்மங்கலத்தில் மீண்டும் யாரும் போட்டியில்லை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

நாட்டார்மங்கலம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாததைத் தொடர்ந்து, வழக்கம் போலவேஇங்கு இம்முறையும் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கீரிப்பட்டி, பாப்பா பட்டி மற்றும்நாட்டார்மங்கலம் ஊராட்சி பஞ்சாயத்துத்தலைவர் பதவிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல்நடக்கவில்லை. மேல் ஜாதியினரின் கெடுபிடி காரணமாக யாரும் போட்டியிட முன் வராததால் தான் இந்த நிலைஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீரிப்பட்டி மற்றும் பாப்பாபட்டியில் தேர்தல் நடந்தது. ஆனால்தேர்தல் நடந்த சில நாட்களிலேயே தேர்வு பெற்ற தலைவர்கள் ராஜினாமா செய்து விட்டனர். ஆனால்நாட்டார்மங்கலத்தில் யாரும் போட்டியிடாத காரணத்தால் அங்கு தேர்தலே நடக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதி 3 தலித் ஊராட்சிகளுக்கும் மீண்டும் தேர்தல் நடத்தப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் (23ம் தேதி) முடிவடைந்தது.

இதில் கீரிப்பட்டி மற்றும் பாப்பாபட்டியில் தலா 2 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். ஆனால்நாட்டார்மங்கலத்தில் இந்த முறையும் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து மறுபடியும்நாட்டார்மங்கலத்தில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நடக்காவிட்டால் இந்த கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு நிதியுதவியை ரத்து செய்ய வேண்டும் என்று மாநிலஅரசுக்கு தேசிய எஸ்.சி., எஸ்.டி. கமிஷன் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+