மிக அமைதியாக நடந்தது காஷ்மீர் 2வது கட்ட தேர்தல்
ஸ்ரீநகர்:
காஷ்மீர் சட்டசபைக்கு இன்று 2வது கட்டத் தேர்தல் மிக அமைதியாக நடந்து முடிந்தது. இன்று 30 முதல் 35 சதவீதவாக்குகள் பதிவாகின.
இந்தத் தேர்தலை ஒட்டி நேற்று இரவில் இருந்து எல்லைப் பகுதியில் இந்தியப் படைகளை நோக்கி பாகிஸ்தான்ராணுவத்தினர் சுட்ட வண்ணம் இருந்தனர். இந்தியப் படைகள் திருப்பித் தாக்கினர்.
ஜம்மூவில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்தது. ஜம்மூவில் நகர்ப் பகுதிகளைவிட பாகிஸ்தான் எல்லையைஒட்டிய கிராமப் பகுதிகளில் அதிக மக்கள் வாக்களித்தனர். ஆனால், ஸ்ரீநகரில் வாக்குப் பதிவு ஆரம்பத்தில்இருந்தே மிக மந்தமாக இருந்தது. இங்கு 10 சதவீத வாக்குகள் கூட பதிவாகவில்லை.
ஜம்மூவில் ஹவா கதம் பகுதியில் வாக்களிக்காதவர்களை பாதுகாப்புப் படையினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.இந்த ஒரு சம்பவம் தவிர மற்றபடி தேர்தல் பிரச்சனை இல்லாமல் நடந்து முடிந்தது.
கடந்த 16ம் தேதி நடந்த முதல் கட்டத் தேர்தலில் நாடே ஆச்சரியப்படும் வகையில் 47 சதவீதம் வாக்குகள் வரைபதிவாகின.
ஆனால் அந்த முதல் கட்டத் தேர்தல் முடிவடைந்த கடந்த ஒரு வாரத்தில் தீவிரவாதிகளின் அட்டூழியம் தலை தூக்கிவிட்டது. இதனால் இரண்டாவது கட்டத் தேர்தலில் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகியுள்ளன.
திடீர் தாக்குதல்:
ஸ்ரீநகரில் நேற்று நள்ளிரவு தேர்தல் பாதுகாப்பில் ஈபட்டிருந்த 3 போலீசா தீவிரவாதிகள் பிடித்துச் சென்று ஒருவீட்டில் சிறை வைத்தனர். அவர்களை விடுவிக்க தங்களுடன் பேச்சு நடத்த வேண்டும் என தீவிரவாதிகள் கூறினர்.
ஆனால், இன்று அதிகாலை ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தி 3 போலீசாரையும் மீட்டது. அந்த வீட்டின் ஒருபகுதியில் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்திய ராணுவம் இன்னொரு பக்கமாக அதிரடியாக உள்ளே புகுந்துத்தாக்கியது.
இதில் கடத்தலில் ஈடுபட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தீவிரவாதிகளில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒருவன் தப்பியோடிவிட்டான்.
இன்று தேர்தல் நடந்த 3 மாவட்டங்களில் உள்ள 28 தொகுதிகளிலும் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இன்றைய தேர்தலில் முதல்வர் பரூக் அப்துல்லாவின் மகன் ஒமர் அப்துல்லா உள்பட 263 வேட்பாளர்கள் களத்தில்இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் தீவிரப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 22 லட்சம் பேர்வாக்களிப்பதற்காக 2,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இன்று காலை 7 மணிகு வாக்குப் பதிவு தொடங்கி 4 மணிக்கு முடிவடைந்தது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, கிரீஸ், நெதர்லாந்து, ஜப்பான், ஜெர்மனி மற்றும்கனடா நாடுகளைச் சேர்ந்த 15 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இந்த இரண்டாவது கட்டத் தேர்தலைபார்வையிட்டனர்.
இன்றைய தேர்தலை புறக்கணிக்குமாறு பாகிஸ்தானன் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு மக்களுக்கும்தேர்தல் பணியாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. இன்று முழு அடைப்புக்கு ஹூரியத் மாநாடு அமைப்புஅழைப்பு விடுத்திருந்தது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications