தமிழகத்துக்கு எதிராக ராஜ்குமார் தலைமையில் நாளை பெங்களூரில் ஊர்வலம்
பெங்களூர்:
தமிழகத்துக்கு எதிராக நாளை நடிகர் ராஜ்குமார் தலைமையில் காவிரி ஊர்வலம் நடக்கவுள்ளது.
தமிழகத்துக்கு காவிரி நீரைத் தரக் கூடாது என்று வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடக்கிறது. ஏற்கனவே, மைசூரிலும்மாண்டியாவிலும் நடந்து வரும் தமிழ்நாட்டுக்கு எதிரான கலாட்டாக்களுக்கு ராஜ்குமார் ரசிகர்கள் தான் முக்கியக் காரணம்.
இந் நிலையில் ராஜ்குமாரின் நேரடித் தலைமையில் தமிழகத்துக்கு எதிரான இந்த கண்டன ஊர்வலம் நடக்கிறது.
கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் நடக்க உள்ள இந்தப் பேரணி தமிழர்கள் நிறைந்த காந்தி நகரில் (மெஜஸ்டிக் பஸ்ஸ்டாண்ட் பகுதி) ஆரம்பிக்கிறது. காந்தி நகர் பூங்காவில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த ஊர்வலத்துக்கு ராஜ்குமார்தலைமை வகிக்கிறார்.
முக்கிய சாலைகள் வழியாக இந்த ஊர்வலம் குயீன்ஸ் ரோடு அருகே உள்ள ராஜ்பவனை அடையும். அங்கு கவர்னரைச் சந்தித்துஇவர்கள் தமிழகத்துக்குத் தண்ணீர் விடக் கூடாது என்ற கோரிக்கை மனுவையும் தர உள்ளனர்.
பின்னர் முதல்வர் கிருஷ்ணாவையும் சந்தித்து மனு தர உள்ளனர்.
காவிரிப் பிரச்சனையில் கர்நாடகத்துக்கு ஆதரவான தீர்ப்பு வரும் வரை அனைத்து பொது நிகழ்ச்சிகயுைம் புறக்கணிக்கப்போவதாக கர்நாடக திரைப்படத்துறையின் பல்வேறு அமைப்புகள், சஙகங்கள் அறிவித்துள்ளன.
நாளை நடத்தப்பட உள்ள தமிழக எதிர்ப்பு ஊர்வலம் குறித்து நேற்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் பெங்ளூரில் நடந்தது. இதில்ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, அவரது மகன் ராகவேந்திர ராஜ்குமார், ராஜ்குமார் ரசிகர் மன்றச் செயலாளர் சா.ரா.கோவிந்துஆகியோர் கலந்து கொண்டனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications