நடிகனை பூஜிக்காதீர்கள்: ராமதாஸ் பேச்சு
சென்னை:
நடிகர்களை ரசிகர்கள் பூஜிக்கக் கூடாது என டாக்டர் ராமதாஸ் கூறினார்..
சென்னையில் சினிமாவும் மக்களும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் ராமதாஸ் பேசியதாவது:
இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள எல்லா நடிகர்கள், இயக்குனர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால்,ஒருவர் கூட வரவில்லை. மக்களை பாதிக்கும் எந்த விஷயம் குறித்தும் தங்களுக்குக் கவலையில்லை என்பதை அவர்கள்வெளிக்காட்டிவிட்டார்கள்.
சினிமா மக்களை சீரழிக்கவில்லை என்று சொல்ல நடிகர்கள் வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை?.
ஒரு அறிவார்ந்த தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்கி நாட்டில் தமிழ்நாட்டை தலை நிமிர்ந்து நிற்கச் செய்ய வேண்டும். இதற்கு சினிமாதடையாக இருப்பது நிஜம், இது பல வழிகளில் நம் மக்களை சீரழிக்கிறது.
தமிழ் மொழி, நமது கலாச்சாரம், பண்பாடு என அனைத்தையும் சீரழித்துவிட்ட சினிமா தமிழனின் முகவரியைக் கூட தொலைக்கச்செய்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் நான் ஒரு நாடோடி, எனக்கு மொழியோ அடையாளமோகிடையாது என்ற நிலைக்கு நம்மைத் தள்ளவிடுவார்கள்.
எனது வருத்தம் எல்லாம் ரசிகர் மன்றங்கள் குறித்துத் தான். தமிழக இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டுமானால்ரசிகர் மன்றங்களை ஒழிக்க வேண்டும் என்றேன். ஆனால், இதற்கு ஆதரவு இல்லை.
எனக்கு தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதும் அக்கறை இருப்பதால் இப்படிப் பேசுகிறேன். இப்படிப் பேசினால் ஓட்டு கிடைக்காதுஎன்று என்னை நண்பர்கள் எச்சரித்தார்கள். நான் வெறும் ஓட்டுக்காக மட்டும் கட்சி நடத்தவில்லை.
எனக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்தன. அதில் யாரும் என் சாதி கிடையாது, என் கட்சி கிடையாது. ஆனாலும் நான் சினிமாகுறித்துப் பேசியதை ஆதரித்துக் கடிதம் எழுதியிருந்தார்கள்.
நீங்கள் எடுத்த நிலையை விட்டு விலகி விடாதீர்கள், முன்னெடுத்துச் செல்லுங்கள் என்று எழுதியிருந்தார்கள்.
தமிழக அளவில் தாமரை விருது பெறவும் உலக அளவில் ஆஸ்கர் விருது பெறவும் தமிழனுக்கு தகுதி உண்டு. அதைப் போன்றதரம் வாய்ந்த படங்களை எடுங்கள்.
எதையும் ரசிக்க மனிதனுக்கு உரிமை உண்டு. அது கண்மூடித்தனமாக இருந்தால் தான் பிரச்சனை. உங்களுக்குப் பிடித்தகலைஞனுக்கு அபிமானியாக இருப்பது தவறேயில்லை. ஆனால், நடிகனை பூஜிப்பது தவறு.
சினிமா ஒரு புறம் என்றால் டிவி மறுபுறம். மெகா தொடர்கள் என்ற பெயரில் கேலிக் கூத்துக்கள் அரங்கேறி மக்களைஅடிமைகளாக்க ஆரம்பித்துள்ளன. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மெகா தொடர்களை தடை செய்ய வேண்டும் என்றார்ராமதாஸ்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications