கோவில் கட்டிய கணக்கு கேட்டால் மெளனம்: சாமியார் மீது மக்கள் கொதிப்பு
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில் ரூ.19 லட்சம் செலவில் கோவில் கட்டிய ஒரு சாமியார், அது தொடர்பானகணக்குகளை ஊர் மக்கள் கேட்டால் மெளன விரதம் இருந்து வருகிறார். இதுகுறித்து கிராம மக்களிடையேகொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மாத்தியம்பட்டி கிராமத்தில் வேலுச்சாமி என்ற சாமியார் ஒருகோவில் கட்டத் தொடங்கினார். அவரது அருள் வாக்கினால் கவரப்பட்ட ஊர் மக்கள் ஏராளமான பணத்தைநன்கொடையாக கோவில் கட்ட வழங்கினர்.
இப்படி சேர்ந்த ரூ.19 லட்சம் பணத்தில் கோவில் கட்டி முடித்தார் வேலுச்சாமி. சில வருடங்களுக்கு முன்பு இந்தக்கோவிலின் கும்பாபிஷேகமும் சிறப்பாக நடந்தது.
கோவில் கட்டி, கும்பாபிஷேகமும் முடிந்த நிலையிலும் பொதுமக்களின் நன்கொடை குறித்து கணக்கு காட்டாமல்இருந்து வந்தார் வேலுச்சாமி.
இதுகுறித்து ஊர்ப் பெரியவர்கள் வேலுச்சாமியை அணுகியபோது, அவர்களிடம் எதுவும் பேசாமல் அமைதிகாத்தார் வேலுச்சாமி. மேலும் தான் மெளன விரதம் இருப்பதாகவும் அவர்களிடம் சைகை காட்டியுள்ளார்.
கணக்கு கேட்க செல்லும் போதெல்லாம் சாமியார் இப்படியே கூறி வந்ததால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்,நன்கொடையாக வசூலித்த ரூ.19 லட்சம் பணத்தையும் சாமியார் மோசடி செய்திருக்கலாம் என்று சந்தேகம்அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் நன்கொடையாக கொடுத்த பணத்தை ஆந்திராவில் வசிக்கும் தனது மகனிடம் சாமியார் கொடுத்துவிட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். பணம் குறித்து கேட்கப் போனால் மெளன விரதம் என்ற பெயரில் சாமியார்பேச மறுப்பதாகவும் பொதுமக்கள் குமுறுகிறார்கள்.
-->












Click it and Unblock the Notifications