காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவன் அதிரடி நீக்கம்: சோ.பா. புதிய தலைவர்
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோ.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செயல் தலைவராக பதவி இறக்கம்செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ்- த.மா.கா. இணைப்பு நடந்தபோதே இளங்கோவன் மாற்றப்படுவார் என்று கருதப்பட்டது. அவருக்குப் பதிலாகத.மா.காவை நடத்தி வந்த வாசன் மாநில காங்கிரஸ் தலைவாரகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வாசனை அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக்கிய சோனியா காந்தி அவர் வசம் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ்பொறுப்பை ஒப்படைத்தார்.
இதனால் இளங்கோவன் தனது பதவி தப்பியதாக நினைத்துக் கொண்டிருந்தார். இந் நிலையில் வாசன் அணியினர்இளங்கோவனை காலை வாரிவிட்டு வந்தனர். இளங்கோவனின் அசுர வளர்ச்சியை விரும்பாத முன்னாள் த.மா.காவினர் அவரைஎப்படியாவது கட்சித் தலைவர் பதவியில் இருக்க நீக்கத் துடித்தனர்.
இந் நிலையில் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் யார் தலைவராக வேண்டும் என்று எழுதித்தருமாறு குழுவினரிடம் மத்திய பார்வையாளராக வந்த ரமேஷ் சென்னிதலா கூறினார்.
அதில் பெரும்பாலானவர்கள் தாங்களே தலைவராக வேண்டும் என்று எழுதுக் கொடுத்ததாகத் தெரிகிறது. மற்றவர்கள் இருபிரிவாகப் பிரிந்து ஒரு பிரிவினர் இளங்கோவனே தொடர வேண்டும் என்றும் இன்னொரு பிரிவினர் ஆளை மாற்ற வேண்டும்என்று கோரினர்.
இதையடுத்து சென்னிதலா கொடுத்த பரிந்துரையின்பேரில் வாசன் அணியைச் சேர்ந்த சோ.பாலகிருஷ்ணன் தலைவராகநியமிக்கப்பட்டுள்ளார்.
வாழப்பாடி ராமமூர்த்திக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை பரபரப்பாக நடத்திக் காட்டியவர் இளங்கோவன் தான்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக மிகத் தீவிரமான நிலையை எடுத்தார். தினந்தோறும் செய்திகளில் இடம் பிடித்தார். ஓரளவுக்குகட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.
ஆனால், பாழாய்ப் போன காங்கிரஸ் கோஷ்டிப் பூசல் அவரது பதவிக்கு வேட்டு வைத்துள்ளது. தனது பதவி பறிக்கப்படஉள்ளதை ஏற்கனவே தெரிந்து கொண்டுவிட்ட இளங்கோவன், கடந்த இரு நாட்களாகவே வாசனை மிகக் கடுமையாகத் தாக்கிபேசி வந்தார்.
அவரது ஆதரவாளர்கள் வாசனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டினர். போட்டிக்கு இளங்கோவனைத் திட்டிவாசன் கோஷ்டி போஸ்டர் ஒட்டி வந்தது.
காங்கிரஸ் கோஷ்டிச் சண்டையால் தமிழக சுவர்கள் நாற ஆரம்பித்தன. இதையடுத்து மேலும் இந்த விவகாரத்தை ஆறப்போடாமல் இளங்கோவனை தூக்கி அடித்திருக்கிறது காங்கிரஸ் மேலிடம்.
இப்போது தலைவராகியுள்ள சோ.பாலகிருஷ்ணன், மூப்பனாருக்குப் பின் அவரது மகன் வாசனுக்கும் மிக விசுவாசமாகஇருந்தவர்.
கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை சட்டசபையில் த.மா.கா. தலைவராக இருந்தவர். சிவகங்கை மாவட்டத்தைச்சேர்ந்தவர்.
இளங்கோவன் நீக்கப்பட்டதன் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சின் செயல் வேகம் குறையப் போவது மட்டும் நிச்சயம்.
-->












Click it and Unblock the Notifications