பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு: கல்லூரி ஆசிரியர்கள் நிராகரிப்பு

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துமாறு தமிழகஅரசு விடுத்த அழைப்பை அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றம் நிராகரித்தது.

திருச்சியில் இன்று நடந்த அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்துமன்றத் தலைவர் சாந்தாராம் கூறுகையில்,

சமீபத்தில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன்பேச்சுவார்த்தை நடத்த அரசு ஒத்துக் கொண்டது. ஆனால் உறுதி கூறியபடி நடக்கவில்லை.

மாறாக அரசுக்கல்லூரி ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் மாணவர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டி வருகிறார்கள்.போலீஸாரை வைத்து மாணவர்களின் போராட்டத்தை அடக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவுடன் பேச்சு நடத்துமாறு அரசு அழைப்புவிடுத்துள்ளது. நாங்கள் இந்தக் குழுவையே ஏற்கவில்லை. எனவே பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளமாட்டோம்.

உடனடியாக அரசுக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாணவர்களின் பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அதுவரை இந்தக் குழுவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.

எங்களது கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்றார் சாந்தாராம்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+