காவிரி: நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்படுத்திய வக்கீல்கள்
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற வழக்கறிஞர்கள் தடுக்கப்பட்டார்கள்.
வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் கருப்பன் தலைமையில் வக்கீல்கள் குழு ஒன்று இன்று காலை கர்நாடகத்தைக்கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்றது.
உடனடியாக விரைந்து வந்த நீதிமன்றப் பதிவாளர் சிவராமன், உயர்நீதிமன்ற வளாகத்தில் இதுபோன்றபோராட்டங்கள் வரம்பு மீறியவை. எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறினார்.
ஆனால் தொடர்ந்து கருப்பன் தலைமையிலான வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டே தீருவோம் என்றனர்.தொடர்ந்து சிவராமன் போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தவே போராட்டத்தைக் கைவிட்டனர் வக்கீல்கள்.
பின்னர் கருப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி நீர் ஆணையத் தீர்ப்பை கர்நாடகம் மதிக்கவில்லை.சரி, அது பரவாயில்லை என்றாலும் கூட சுப்ரீம் கோர்ட்டையே தூக்கி தூரப் போட்டு விட்டார்கள்.
எனவே இனிமேலும் பொறுக்க முடியாது என்பதால் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
காவிரிப் பிரச்சினையில் ஒன்றுமே செய்யாமல் மாநிலத்திற்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கும் தமிழகத்தைச்சேர்ந்த 10 மத்திய அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் கருப்பன்.
கர்நாடகத்தைக் கண்டித்து 30ம் தேதி பந்த்:
இதற்கிடையே கர்நாடக அரசைக் கண்டித்து வரும் 30ம் தேதி பந்த் நடத்த தமிழக விவசாயிகள் சங்கம் முடிவுசெய்துள்ளது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. அக்கூட்டத்தில் காவிரி நீரைத் திறந்து விடாமல்அழிச்சாட்டியம் செய்யும் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் சிவசாமிபின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காவிரி நீரைத் திறந்து விடாமல் அடம் பிடிக்கும் கர்நாடக அரசுக்கு கூட்டத்தில் கடும் கண்டனம்தெரிவிக்கப்பட்டது. கர்நாடக அரசைக் கண்டித்து வரும் 30ம் தேதி முழு அடைப்பு நடத்தவும் முடிவுசெய்யப்பட்டது.
விவசாயிகளின் கடன் நிலுவையை அரசு ரத்து செய்து விட்டு, மீண்டும் புதுக் கடன்கள் வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
தமிழகத்தையே வறட்சி பாதித்த மாநலமாக அறிவிக்க வேண்டும் என்றார் சிவசாமி.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications