தமிழகத்துக்கு எதிராக ராஜ்குமார் நடத்திய ஊர்வலத்தில் கலவரம்: பஸ்கள் சேதம், தியேட்டர்கள் மூடல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

நடிகர் ராஜ்குமார் தலைமையில் பெங்களூரில் தமிழகத்துக்கு எதிராக நடந்த ஊர்வலத்தில் பெரும் வன்முறை நடந்தது.ராஜ்குமார் ரசிகர்களின் எச்சரிக்கை காரணமாக பெங்களூரில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்கக் கூடாது என்று கோரி இந்த ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் வந்த ராஜ்குமார் ரசிகர்கள்பஸ்கள் மீது கல்வீசித் தாக்கினர்.

பெங்களூர் மெஜஸ்டிக் பஸ் நிலையம் அருகே உள்ள மைசூர் பாங்க் சர்க்கிளை ஒட்டிய அரசுக் கல்லூரியில் இருந்து இன்று காலைஇந்த ஊர்வலம் தொடங்கியது. இதில் ராஜ்குமாரின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.

கன்னட சினிமா உலகின் முக்கிய ஹீரோக்கள், ஹீரோயின்கள், இயக்குனர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் எம்.ஜி.ரோடு அருகே மகாத்மா காந்தி சிலை அருகே வந்தபோது அதில் ராஜ்குமார், நடிகரும் எம்.பியுமானஅம்பரீஷ் ஆகியோர் சேர்ந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த ஊர்வலம் எம்.ஜி.ரோட்டைக் கடந்தபோது அந்த வழியாக வந்தபஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. எம்.ஜி.ரோட்டி உள்ள சில தமிழர் கடைகள் மீது கற்கள் வீசப்பட்டன.

பின்னர் கப்பன் பார்க் வழியாக இந்த ஊர்வலம் சென்றது. அப்போது ஒரு காரை இக் கும்பல் அடித்து நொறுக்கியது.

பின்னர் தலைமைச் செயலகம் அமைந்துள்ள விதான செளதா அருகே வந்தபோது அதில் வந்தவர்கள் பெரும் ரகளையில்ஈடுபட்டனர். ஊர்வலத்தில் வந்தவர் தறிகெட்டு நாலாபக்கமும் ஓடி வாகனங்களைத் தாக்கினர். பைக்குகள், கார்கள், பஸ்கள் எனஅனைத்து வாகனங்கள் மீதும் தாக்குதல் நடந்தது.

அந்த சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் இடையே புகுந்த இந்தக் கும்பல்கள் தமிழக பதிவு எண் கொண்டவாகனங்களைத் தேடினர். ஆனால், நல்லவேளையாக தமிழக வாகனம் ஏதும் இவர்களது கண்ணில் சிக்கவில்லை.

எல்லா பக்கமும் சிதறி ஓடிய இந்தக் கும்பல்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.

இதையடுத்து அந்தக் கும்பல்கள் அங்குள்ள ஹோட்டல் கேபிடல் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைய முயன்றன.உள்ளே நுழைந்து கிடைத்ததை அள்ள இந்தக் கும்பல் முயன்றது. ஆனால், ஹோட்டல் ஊழியர்களும் போலீசாரும் சேர்ந்துஇவர்களை விரட்டியடித்தனர். ஹோட்டல் கதவுகளை மூடினர்.

இதையடுத்து அந்த ஹோட்டல் மீது கற்கள் வீசப்பட்டன. இந்த ஹோட்டல் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரமேஷ் அரவிந்த் (பஞ்ச தந்திரத்தில் கமலுடன் நடித்தவர்) சென்னையில்இருந்து இன்று காலை பெங்களூர் வந்திருந்தார். நடிகர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட தமிழில் தலைகாட்டிய பல கன்னட நடிகர்களும்இதில் கலந்து கொண்டனர்.

பின்னர் ராஜ்குமார் தலைமையில் அவரது மனைவி பர்வதம்மா, மகன் சிவராஜ்குமார், அம்பரீஷ், நடிகைகள் ஜெயமாலா(பழைய தமிழ் படங்களில் நடித்தவர்) உள்ளிட்டவர்கள் விதான சவுதாவுக்குள் சென்று முதல்வர் கிருஷ்ணாவைச் சந்தித்துதமிழக்துக்குத் தண்ணீர் விடக் கூடாது என்று கூறி மனு கொடுத்தனர்.

பின்னர் ராஜ்பவன் சென்று ஆளுநரிடமும் மனு கொடுத்தனர். இந்த ஊர்வலத்தை ஒட்டி நடந்த கலவரததில் 10க்கும் மேற்பட்டபஸ்கள் சேதமடைந்தன. பல கார்கள், வாகனங்கள் உடைக்கப்பட்டன.

இந்த ஊர்வலத்தையொட்டி மெஜஸ்டிக் பகுதியிலும் எம்.ஜி.ரோட்டிலும் பல கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஊர்வலப் பாதைமுழுவதும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

இன்று ஒரு நாள் முழுவதும் பெங்களூரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+