ரேஷன் அரிசி விலை கிடுகிடு உயர்வு: ஜெ. திடீர் நடவடிக்கை
சென்னை:
நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக ரேஷன் அரிசி விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 10 கிலோவுக்குமேல் ரேஷன் அரிசியை வாங்குபவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட உள்ளனர்.
இப்போது ரேசன் கடையில் 1.20 கோடி பேர் அரிசி வாங்கி வருகின்றனர். ரேசன் கடைகளில் இப்போது ஒருகிலோ அரிசியின் விலை ரூ. 3.50 ஆக உள்ளது.
இந் நிலையில் 10 கிலோ வரை மட்டுமே ரூ. 3.50க்கு விற்கப்படும் எனவும் 10 கிலோவுக்கு மேல் அரிசி வாங்கினல்அதன் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 6 ஆக இருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழகத்தின் நிதி நிலைமை படு மோசமாக உள்ளது. அரசே திவாலாகும் நிலைக்குச் சென்றுள்ளது. கடந்த காலத்தில்திமுக ஆட்சியினர் செய்த நிர்வாக சீர்கேடுகளே இதற்குக் காரணம்.
நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு உதவவில்லை. உலக வங்கியும், பிற வங்கிகளும் கூட உதவமுன்வரவில்லை. இந்த நிலையில் நிதி நிலையை சீரமைக்க சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
அதன்படி ரேஷன் கடைகளில் 10 கிலோவுக்கு மேல் விற்கப்படும் அரிசியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.6 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 10 கிலோவுக்குள் அரிசி வாங்குபவர்கள் ஏற்கனவே அமலில் உள்ள ரூ.3.50 (ஒருகிலோவுக்கு) கொடுத்தாலே போதும்.
வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
மேலும் இனிமேல் நேரடி நெல் கொள்முதல் செய்வதற்குப் பதில், மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல்கொள்முதல் கொள்கையைக் கடைப்பிடிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய தொகுப்பிலிருந்து 2 லட்சம் டன் அரிசியை ரூ.12க்கு வாங்கி, அது தமிழக மக்களுக்கு கிலோ ரூ.3.50க்குக்காடுக்கப்படுகிறது. மானியத் தொகையாக மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு ரூ 1,600 கோடிக்கு நிதிச்சுமைஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த அரிசி விலை உயர்வின் மூலம் இந்த நிதிச்சுமை ரூ.774 கோடியாகக் குறையும். எனவேபொதுமக்கள் அரசின் நிலையை உணர்ந்து இந்த விலை மாறுதலை ஏற்றுக் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications