29 பக்தர்கள் பலி: 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்:

குஜராத்தில் காந்திநகரில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலில் தீவிரவாதிகள் புகுந்து சராமாரியாகச் சுட்டதில்உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை கோவிலுக்குள் புகுந்த 2தீவிரவாதிகளையும் கறுப்புப் பூனைப் படை கமாண்டோக்கள் இன்று காலை சுட்டுக் கொன்றனர்.

நேற்று மாலை 4.45 மணிக்கு ராணுவ உடையில் கோவில் வளாகத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்குள்ளசச்சிதானந்தா ஹால் எனப்படும் தியான மண்டபத்தில் முதலில் நுழைந்தனர். அங்கு இருந்த பக்தர்கள் மீது கிரனைட்குண்டை வீசினர். இதில் பல பக்தர்கள் அந்த இடத்திலேயே இறந்தனர். இதையடுத்து கோவிலில் இருந்தநூற்றுக்கணக்கான பக்தர்கள் சிதறி ஓட ஆரம்பித்தனர்.

இதையடுத்து அவர்களை நோக்கி தீவிரவாதிகள் சராமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் உடனே 11 பேர்இறந்தனர். மேலும் பலர் ரத்த வெள்ளத்தில் கோவிலுக்குள்ளேயே சரிந்து விழுந்தனர்.

பின்னர் தீவிரவாதிகள் அங்கிருந்து முக்கிய கோவில் அமைந்துள்ள இடத்துக்கு அருகே வந்தனர். அங்குகூடியிருந்த பக்தர்களை சுற்றி வளைத்து சுட்டனர். மேலும் பலரை பிணைக் கைதிகளாக வைத்துக் கொண்டனர்.

இதையடுத்து உடனடியாக ராணுவமும் குஜராத் போலீஸ் படையினரும் கோவிலை சுற்றி வளைத்தனர். ஆனால்,எத்தனை தீவிரவாதிகள் உள்ளனர், அவர்கள் எங்கு மறைந்துள்ளனர் என்பது தெரியாததாலும் அப்பாவி பத்கர்கள்கொல்லப்பட்டுவிடக் கூடாது என்பதாலும் மிக மெதுவாகவே கோவிலுக்குள் முன்னேறினர்.

கோவிலுக்கு எந்தச் சேதமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலும் கமாண்டோக்கள் மிக ஜாக்கிரதையாகவேதாக்குதல் நடத்தினர். பக்தர்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு தீவிரவாதிகள் உள்ளே இருந்து சுட்டதில் தேசியபாதுகாப்புப் படைக் கமாண்டோவைச் சேர்ந்த ஒரு வீரரும் குஜராத் போலீஸ்காரர் ஒருவரும் பலியாயினர்.

இரு தரப்பினருக்கும் இரவு முழுவதும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதற்கிடையே கோவிலுக்குள் மாட்டிக் கொண்டிருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்களை வெளியேற்றும் பணியும்இரவு முழுவதும் நடந்தது. தீவிரவாதிகளின் துப்பாக்கித் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்திக் கொண்டேபக்தர்களை ஒவ்வொருவராக வெளில் கொண்டு வந்தனர் கமாண்டோ வீரர்கள்.

பெரும்பாலான பக்தர்களை வெளியேற்றியதும் அதிகாலையில் கோவிலுக்குள் புகுந்த ராணுவ கமாண்டோக்கள்தீவிரவாதிகளைத் தேடினர். ஆனால் தீவிரவாதிகள் பாத்ரூமில் ஒளிந்து கொண்டனர்.

இதையடுத்து இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் டெல்லியிலிருந்து வந்த தேசியப் பாதுகாப்புப் படையின்"கறுப்புப் பூனை" கமாண்டோ வீரர்கள் கோவிலுக்குள் புகுந்தனர். அவர்கள் கோவிலின் ஒவ்வொரு அறையாகசோதனை நடத்தினர். அப்போது ஒரு அறைக்குள் இருந்து கொண்டு தீவிரவாதிகள் அவர்களை நோக்கிச் சுட்டனர்.

தீவிரவாதிகளைச் சுற்றி வளைத்த கறுப்புப் பூனைப்படை வீரர்கள் அவர்களில் 2 பேரைச் சுட்டுக் கொன்றனர்.

இன்னும் ஒரு தீவிரவாதி கோவிலுக்குள்ளேயே மறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் மொத்தமே இரண்டுதீவிரவாதிகள் தான் கோவிலுக்குள் புகுந்தனர் என்றும் அவர்கள் இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் முடிந்தவுடன் டெல்லியில் இருந்து வந்த தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோ பிரிவுத் தலைவர்சீதாபதி கூறுகையில், இரவில் கோவிலுக்குள் நுழைவது உள்ளே இருக்கும் பக்தர்களின் உயிருக்கு மிக ஆபத்தானதுஎன்பதை உணர்ந்தோம். இதனால் தான் விடிவதற்காகக் காத்திருந்தோம். காலை 5.10 மணியளவில் உள்ளேநுழைந்த எங்கள் படை 10 நிமிடத்தில் தீவிரவாதிகளை பாத்ரூமில் வைத்தே சுட்டுக் கொன்றது என்றார்.

இதற்கிடையே இன்று காலை 9 மணிக்கு கோவிலுக்குள் ஒரு குண்டு வெடித்தது. இது தீவிரவாதிகளால் உள்ளேபோடப்பட்டிருந்த குண்டு என்பது தெரியவந்தது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+