காமராஜர், மூப்பனார் வழியில் செயல்படுவேன்: சோ.பா.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காமராஜர் மற்றும் மூப்பனார் ஆகியோரின் கொள்கைகளின் அடிப்படையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைசிறப்பான நிலைக்குக் கொண்டு வர பாடுபடப் போவதாக அக்கட்சியின் புதிய தலைவர் சோ. பாலகிருஷ்ணன்கூறினார்.
புதிய காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பாலகிருஷ்ணன், கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கடெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோர் கடைப்பிடித்த நெறிமுறைகள்,கொள்கைகள்ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படுவேன்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுவுள்ளதாக, சிறப்பான நிலைக்குக் கொண்டு வர முயலுவேன்.
கட்சியின் அனைத்து மட்டத்திலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். செயல் தலைவரானஇளங்கோவனுடன் இணைந்து செயல்படுவேன் என்றார் பாலகிருஷ்ணன்.
-->












Click it and Unblock the Notifications