குஜராத்தில் பஜ்ரங்தள் அட்டகாசம்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத்தில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து விசுவஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) மற்றும் சிவ சேனா ஆகிய ஹிந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த "பாரத் பந்த்"இன்று காலை முதல் நடந்து வருகிறது.

ஆனால், குஜராத், மகாராஷ்டிரம், கேரளா தவிர மற்ற மாநிலங்களில் பந்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

தமிழகம், சத்தீஷ்கர் மாநிலங்களில் பந்த் முழுத் தோல்வியடைந்தது. பந்த்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத்தின் பல பகுதிகளிலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை பந்த் தொடங்கியது.

பந்த்தையொட்டி குஜராத்தில் அனைத்துப் பள்ளி-கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள்,கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்தும் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில்ஓரிரு இரு-சக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தன.

பதற்றம் மிகுந்த பகுதிகளில், குறிப்பாக சிறுபான்மை முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் ஆயிரக்கணக்கானராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், சாலையில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்தது. தொடர்ந்து நடந்து வரும் வன்முறை,பந்த்களால் மக்கள் வெறுப்படைந்துவிட்டதையே இது காட்டுகிறது.

சூரத் நகரில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். சிறுபான்மையினர்வசிக்கும் பகுதிகளில் கூட்டமாக நுழைந்து 2 வாலிபர்களை கத்தியால் குத்தினர்.

இதையடுத்து அப் பகுதியில் பஜ்ரங் தள் தொண்டர்களை வாள்களால் தாக்கி விரட்டினர். இதில் இரு தரப்பிலும்பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் கோத்ரா ரயில் எரிப்பு பயங்கரத்தைத் தொடர்ந்து வி.எச்.பி. அம்மாநிலத்தில் நடத்தியபந்த்தின் போது பயங்கரமான வன்முறை ஏற்பட்டது. இதைக் கவனத்தில் கொண்டு தற்போதைய பந்த்தின் போதுபாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதே போல ஒரு ஆட்டோ டிரைவரையும், ஒரு நகராட்சி ஊழியரையும் பஜ்ரங் தள் அமைப்பினர் நடுரோட்டில்விரட்டிச் சென்று கத்தியால் குத்தினர்.

இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று அகமதாபாத் வந்தார். மாநிலத்தில்குவிக்கப்பட்டுள்ள ராணுவப் படைப் பிரிவுகளின் கமாண்டர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் காந்திநகர் சென்று தாக்குதலுக்குள்ளான கோவிலையும் பார்வையிட்டார். மருத்துவமனைக்குச்சென்று காயமடைந்த பக்தர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இப்பகுதிகளில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கிகள் பாதிக் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு இயங்கி வருகின்றன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+