எம்.எல்.ஏவுக்கு எதிராக அழகப்பா கல்லூரி மாணவர்கள் மொட்டை

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி:

அரசுக் கல்லூரி மாணவர் போராட்டத்தின் ஒரு பகுதியாக காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்லூரி மாணவர்கள்தங்கள் தலைகளை மொட்டையடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினர்.

பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகள் இணைக்கப்படுவதை எதிர்த்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகஅரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே தங்களது கல்லூரியின் முதல்வரை அதிமுக எம்.எல்.ஏவான உமாதேவன் கொலைை செய்வதாகமிரட்டியது அழகப்பா கல்லூரி மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுளளது.

தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள அவர்கள் மொட்டையடிக்கும் போராட்டத்தை நடத்தினர்.

அதிமுக எம்.எல்.ஏ. உமாதேவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று எராளமான மாணவர்கள்தங்கள் தலைகளை மொட்டையடித்துக் கொண்டனர்.

இதற்கிடையே சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்களும் சட்டக் கல்லூரி மாணவர்களும் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன்இணைப்பதைக் கண்டித்து சட்டை அணியாமல் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினர்.

திருச்சி ஈ.வே.ரா. கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கறுப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். கல்லூரி வாயிலில்கறுப்புக் கொடியையும் ஏற்றினர்.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்களும், அரசு பெண்கள் கலைக் கல்லூரி மாணவர்களும் அரசுக்கு எதிராக கறுப்புப் பட்டைஅணிந்து ஊர்வலம் சென்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+