மத்திய நிபுணர் குழுவை கலங்கடித்த தமிழக வறட்சி
சென்னை:
தமிழகம் முழுவதும் வறட்சி பாதிப்பை நேரில் பார்வையிட்ட மத்திய நிபுணர் குழுவினர் இன்று சென்னை திரும்பினர்.
கடந்த 3 நாட்களாக இந்த நிபுணர் குழுவினர் மாநிலத்தின் பல மாவட்டங்ளிலும் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
மத்திய வேளாண்மைத்துறை செயலாளர் ஜோகிந்தர் சிங் தலைமையில் வந்த அவர்கள் 4 குழுக்களாகப் பிரிந்து தமிழகத்தின்வறட்சி பாதிப்பை நேரில் பார்வையிட்டனர்.
பல இடங்களில் இவர்களது காலில் விழுந்து விவசாயிகள் அழுதனர். எங்கள் நிலத்தை எடுத்துக் கொண்டாவது மத்திய அரசுபணம் தர வேண்டும் என இவர்களிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
வறட்சியின் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதை ஒப்புக் கொண்ட சந்திரபால் என்ற நிபுணர் குழு உறுப்பினர், மத்திய அரசிடம் இதுகுறித்து தெளிவாக விளக்கப்படும் என்றார்.
சில இடங்களில் கோபமடைந்த பொது மக்கள் காலிப் பானைகளை வைத்து இவர்களைத் தடுத்து தங்கள் எதிர்ப்பைத்தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் விவசாயிகள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகளை சந்தித்துப் பேசினர்.
வறண்டு கிடக்கும் கண்மாய்கள், பாலம் பாலமாய் பிளந்து கிடக்கும் விவசாய நிலங்கள், காயந்து போன தென்னைத் தோட்டஙகள்,குடிநீருக்காக கிலோ மீட்டர் கணக்கில் குடங்களுடன் அலையும் மக்கள் என தமிழக வறட்சி தங்களைக் கலங்கடித்துவிட்டதாகநிபுணர் குழுவினர் மக்களிடம் கூறினர்.
தங்களது ஆய்வை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறைஅதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இன்று மாலை டெல்லி திரும்பும் அவர்கள் தமிழகத்தின் வறட்சி குறித்து முழு விவர அறிக்கையை மத்திய அரசிடம் வழங்குவர்.
இந்த வறட்சியில் இருந்து மீள உடனடியாக ரூ 1,434 கோடி வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications