மலேசியா: சுற்றுலா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
திருச்சி:
இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு இந்த ஆண்டு இதுவரை 1.8 லட்சம் இந்தியர்கள் சுற்றுலாப் பயணம்மேற்கொண்டுள்ளனர் என மலேசிய சுற்றுலாத்துறை மேம்பாட்டு வாரியத்தின் இயக்குனரான மனோகரன்கூறினார்.
இது தொடர்பாக திருச்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவிலிருந்து மலேசியா வர விரும்பும் சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்காக மலேசிய சுற்றுலாத்துறை பலபுதிய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதை முன்னிட்டு மலேசியன் ஏர்லைன்ஸ் தன்னுடைய விமானங்களில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கையைஅதிகரிக்க உள்ளது. மேலும் இந்தியா-மலேசியா இடையிலான விமானங்களின் எண்ணிக்கையையும்அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவிலிருந்து மலேசியா வருவதற்கான பயணக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படவுள்ளன.
மலேசியச் சுற்றுலாத்துறை வரும் நவம்பர் மாதம் சென்னையில் "மலேசிய உணவுத் திருவிழா" நடத்தவுள்ளது.
மலேசியாவுக்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெருமளவுஅதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் 1.43 லட்சம் இந்தியர்கள் மலேசியாவுக்கு வந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு செப்டம்பரிலேயே இந்த எண்ணிக்கை 1.8 லட்சத்தைத் தொட்டுவிட்டது.
மலேசியா வரும் இந்தியர்களில் 55 சதவீதப் பேர் சுற்றுலாப் பயணிகள் தான். இங்கு வரும் ஒவ்வொரு இந்தியசுற்றுலாப் பயணியும் சுமார் 1,000 அமெரிக்க டாலர்கள் வரை செலவு செய்கின்றனர்.
வியாபாரம் தொடர்பாக சுமார் 35 சதவீதம் இந்தியர்கள் மலேசியாவுக்கு வருகின்றனர்.
மேலும் கடந்த ஆண்டு மலேசியாவுக்கு வந்த 1.26 கோடி சுற்றுலாப் பயணிகளில் 8.6 சதவீதம் பேர்இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தான். இந்த ஆண்டில் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால்மலேசியாவுக்கு 630 கோடி அமெரிக்க டாலர் வருவாய் கிடைத்துள்ளது என்றார் மனோகரன்.
-->
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications