மாறனுக்கு இருதய வால்வு மாற்று ஆபரேஷன்: குணமடைந்து வருகிறார்
சென்னை:
மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் இருதயத்தில் செயற்கை வால்வை மாற்றும் ஆபரேஷன்வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து அவர் தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள்தெரிவித்தன.
கடந்த ஜூலை 22ம் தேதி டெல்லியில் அவருக்கு செயற்கை இருதய வால்வு பொருத்தப்பட்டது. அந்த செயற்கைவால்வில் பூஞ்சைத் தாக்குதல் இருப்பது சமீபத்திய சோதனையின் போது தெரிய வந்தது.
இதனால் அவருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து தான் மாறனுக்கு அறுவைச் சிகிச்சை செய்துவேறொரு புதிய வால்வைப் பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி அப்பல்லோ மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணரான எம்.ஆர். கிரிநாத் தலைமையிலானடாக்டர்கள் குழுவினர் நேற்று இந்த அறுவைச் சிகிச்சையை நடத்தினர். புதிய இருதய வால்வு வெற்றிகரமாகப்பொருத்தப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரும் அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளார். அவருக்கு "வென்ட்டிலேட்டர் சப்போர்ட்" கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு மாறனுக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறும் என்று தட்ஸ்தமிழ்.காமில் செய்தி வெளியிடப்பட்டது.ஆனால் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
-->












Click it and Unblock the Notifications