திருச்செந்தூர் நீதிமன்றத்தில் நெடுமாறன்: மீண்டும் 3ம் தேதி ஆஜராக உத்தரவு
திருச்செந்தூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ.நெடுமாறன் இன்று திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
திருச்செந்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக அவர் மீது தனி வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவர் இன்று கடலூரில் இருந்து போலீஸ் வேனில் திருச்செந்தூர் நீதிமன்றம்கொண்டு வரப்பட்டார்.
நீதிமன்றத்தில் பேசிய நெடுமாறனின் வழக்கறிஞர், நெடுமாறன் மீது இந்த வழக்குத் தொடர மாநில உள்துறைச் செயலாளரிடம்மட்டுமே தமிழக போலீசார் அனுமதி பெற்றுள்ளனர். மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை. இதனால் அவர் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டதே தவறு என்றார்.
இதையடுத்து அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி விளக்கம் கேட்டார். அப்போது பேசிய அரசு வழக்கறிஞர், இது குறித்து விளக்கம் தரகால அவகாசம் வேண்டும் என்றார்.
இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நெடுமாறனின் வழக்கறிஞர், இப்படியே வழக்கை இழுத்தடித்து காலதாமதம் செய்ய அரசுமுயல்கிறது. அடிக்கடி கடலூர் சிறையில் இருந்து திருச்செந்தூர் வந்து செல்லும் அளவுக்கு நெடுமாறனின் உடல் நிலை இடம்தரவில்லை. இதனால் அரசுக்கு கால அவகாசம் தரக் கூடாது என்றார்.
ஆனால், இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி அடுத்த மாதம் 3ம் தேதி இது தொடர்பாக பதில் தர அரசு வழக்கறிஞருக்குஉத்தரவிட்டார். அன்றைய தினம் நெடுமாறனையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.
-->












Click it and Unblock the Notifications