தமிழகம் முழுவதும் மின் தடை: மாநிலமே ஸ்தம்பித்தது
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் திடீரென மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்- ஆந்திர மாநிலம் கடப்பா இடையிலான மின் தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின் தடைஏற்பட்டது. 400 கிலோவாட் திறன் கொண்ட இந்த தென்னக மின் கிரிட் இன்று காலை 10.09 மணிக்கு சீர் குலைந்தது. இதனால்ஆந்திராவின் ராமகுண்டத்தில் உள்ள என்.டி.பி.சி. மின் நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு மின்சாரம் வருவது தடைபட்டது.
இந்தத் தடையால் தமிழகத்தின் பிற மின் கட்டமைப்புகளும் குலைந்துபோயின. இதனால் எண்ணூ
இதனால் தமிழகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. சென்னையில் மின்சார ரயில்கள் திடீரென பாதி வழியிலேயே நின்றுவிட்டன.
தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை, அமைச்சர்களின் இல்லங்களும் இதில் தப்பவில்லை.
தமிழகம் முழுவதும் கடும் வெயில் வீசி வரும் நிலையில் மின் விசிறிகள் நின்று போனதால் மக்கள் பெரும் அவதிப்பட்டுவருகின்றனர்.
மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு தலைமைச் செயலகத்துக்கும், ஆளுநர் மாளிகைக்கும், ராணுவ, போலீஸ்கட்டுப்பாட்டு அறைகளுக்கு மின் இணைப்பை வழங்கினர்.
பாதி வழியில் நின்று கொண்டுள்ள மின்சார ரயில்களை இயக்க ரயில்வே துறைக்கு மீணடும் மின் இணைப்பை சரி செய்யும்நடவடிக்கையில் மின் வாரியப் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மின் தடையால் தமிழகம் முழுவதுமே தொழிற்சாலைகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
இந்த மின் தடையை சீர் செய்ய கல்பாக்கம், எண்ணூ
இன்று பிற்பகலுக்குப் பின்னர் தான் நிலைமை சீராகும் என்று தெரிகிறது. இந்த மின் கட்டமைப்பு சீர் குலைவால் தமிழகத்தில் 800மெகாவாட் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.
படிப்படியாக ஒவ்வொரு இடமாக மின் வினியோகத்தை பொறியாளர்கள் சரி செய்து வருகின்றனர்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications