அமைதியாய் நடந்து முடிந்தது "பாரத் பந்த்"
டெல்லி:
குஜராத் கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நடந்த பந்துக்கு குஜராத், மகாராஷ்டிரம், கேரளா தவிர மற்ற மாநிலங்களில்முழு ஆதரவு கிடைக்கவில்லை.
தமிழகம், சத்தீஷ்கர் மாநிலங்களில் பந்த் முழுத் தோல்வியடைந்தது. நாடு முழுவதுமே பந்த் அமைதியாக நடந்துமுடிந்தது.
பந்த்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. குஜராத்தின் பல பகுதிகளிலும் ராணுவம்குவிக்கப்பட்டுள்ளது.
பந்த்தையொட்டி குஜராத்தில் அனைத்துப் பள்ளி-கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள்,கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்தும் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில்ஓரிரு இரு-சக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தன.
பதற்றம் மிகுந்த பகுதிகளில், குறிப்பாக சிறுபான்மை முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் ஆயிரக்கணக்கானராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், சாலையில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்தது. தொடர்ந்து நடந்து வரும் வன்முறை,பந்த்களால் மக்கள் வெறுப்படைந்துவிட்டதையே இது காட்டுகிறது.
பஞ்ரங்தள் அட்டகாசம்:
சூரத் நகரில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். சிறுபான்மையினர்வசிக்கும் பகுதிகளில் கூட்டமாக நுழைந்து 2 வாலிபர்களை கத்தியால் குத்தினர்.
இதையடுத்து அப் பகுதியில் பஜ்ரங் தள் தொண்டர்களை வாள்களால் தாக்கி விரட்டினர். இதில் இரு தரப்பிலும்பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல ஒரு ஆட்டோ டிரைவரையும், ஒரு நகராட்சி ஊழியரையும் பஜ்ரங் தள் அமைப்பினர் நடுரோட்டில்விரட்டிச் சென்று கத்தியால் குத்தினர்.
இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று அகமதாபாத் வந்தார். மாநிலத்தில்குவிக்கப்பட்டுள்ள ராணுவப் படைப் பிரிவுகளின் கமாண்டர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் காந்திநகர் சென்று தாக்குதலுக்குள்ளான கோவிலையும் பார்வையிட்டார். மருத்துவமனைக்குச்சென்று காயமடைந்த பக்தர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனையின் ஆதரவுடன் பந்த் நடந்தது. அலுவலகங்கள் இயங்காவிட்டாலும் கூட போக்குவரத்துபாதிக்கப்படவில்லை.
அனைத்துக் கல்லூரிகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. தனியார் நிறுவனங்களும் இயங்கவில்லை.
ஆனால், நகருக்குள் ரயில் போக்குவரத்து வழக்கம்போல் இயங்குகிறது. காலை 7.45 மணிக்கு செனட்ரல் ரயில் நிலையத்தில் தோம்பிவிலிபகுதியில் சிறிது நேரம் ரயில்களை வி.எச்.பி., சிவசேனைத் தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர்.
ஆனால், ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதையடுத்து ரயில் மறியலை அவர்கள் கைவிட்டனர். அதேபோல மலாட், காந்திவிலியிலும் சில ரயில்களை வி.எச்.பி தொண்டர்கள் தடுத்தனர். ஆனால், அவர்களை போலீசார் தடியடி நடத்திக்கலைத்தனர்.
பேஹ்ந்தி பஜார் பகுதியில் முஸ்லீம்களின் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
பந்தினால் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புசிறிதளவு குறைந்தது.
கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கேரளாவில் இன்றைய பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சில இடங்களில் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன.
பஸ்கள், டாக்சிகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. பள்ளிகள், கல்லூரிகளும் இயங்கவில்லை.
அரசு அலுவலகங்களிலும் மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே வந்திருந்தனர். ஆனால் பால், மின்சாரம், குடிநீர் விநியோகம் போன்றஅத்தியாவசியப் பணிகள் யாவும் பாதிக்கப்படவில்லை.
பந்த்தையொட்டி நேற்று இரவே பல வி.எச்.பி.-ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களைப் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தனர்.
டெல்லியில் பாதிப்பில்லை:
டெல்லியில் பெரும் பாதிப்பும் ஏற்படவில்லை.
கல்வி-வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கின. போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை.
அதே நேரம் அஸ்ஸாமில் பந்துக்கு முழு ஆதரவு இருந்தது. ஆனால், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார்,ஆந்திராவில் பந்துக்கு முழு ஆதரவு இல்லை.
தமிழகத்தில் இந்த பந்துக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications