பேச்சு நடத்த குழு அமைத்தது அரசு: நிராகரித்தனர் ஆசிரியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுடன் பேச்சு நடத்த தலைமைச்செயலாளர் சுகவனேஸ்வர் தலைமையில் 7 பேர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

ஆனால், இந்தக் குழுவுடன் பேச்சு நடத்த முடியாது என ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துவிட்டது.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. முதலில் ஆசிரியர்களுடன் பேச்சு நடத்த அரசு மறுத்தது. பின்னர்கல்வியமைச்சர் தம்பிதுரையும் ஆசிரியர்களை வெறுப்பேற்று வகையில் பேட்டிகள் தந்தார்.

இதனால், போராட்டம் வலுத்து வந்தது. இந் நிலையில் மாணவர்களும் போராட்டத்தில் இறங்க 67 அரசுக் கல்லூரிகளும் செயல்படாமல்இருந்து வருகின்றன.

இந் நிலையில் போராடும் ஆசிரியர்களை சமாதானப்படுத்தவும் அவர்களுடன் பேச்சு நடத்தவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால்,இந்தக் குழுவில் உள்ள பல அதிகாரிகளும் ஆசிரியர்களன் கோரிக்கைகளுக்கு எதிரானவர்கள் என்று தெரிகிறது.

இதனால், இந்தக் குழுவுடன் பேச்சு நடத்த முடியாது என ஆசிரியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

மேலும் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் புகுந்து கலாட்டா செய்த அதிமுக எம்.எல்.ஏ. உமாதேவன், புதுக்கோட்டை கல்லூரி முதல்வரின்நாற்ாலியில் வந்து உட்காந்து கொண்டு அனைவரையும் திட்டிய அந்தப் பகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

கல்வியில் அரசியல் தலையீட்டைத் தடுக்க வேண்டும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவித்து நஷ்டஈடு வழங்க வேண்டும்எனவும் கோரியுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+