மதுரை-சென்னை இடையே விரைவில் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்
மதுரை:
மதுரைக்கும் சென்னைக்கும் இடையே ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் என்ற ரயில் விடப்படும் என்று ரயில்வேத்துறைஇணை அமைச்சரான ஏ.கே. மூர்த்தி கூறினார்.
மதுரையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் தற்போது இந்திய ரயில்வேயிடம் இல்லை.
தமிழகத்தில் உள்ள ஆளற்ற ரயில்வே கிராசிங் அனைத்திலும் ஊழியர்களை நியமிப்பதற்கான பணிகள் விரைவில்மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பாக தமிழக எம்.பிக்களுடன் ரயில்வேத்துறை அமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு நடத்தவுள்ளார்.
கன்னியாகுமரி-சென்னை நகரங்களுக்கு இடையிலான ரயில் பாதையை மின்மயமாக்குவதற்கு ரூ.2,000 கோடிஉதவியை அரசிடம் கோரவுள்ளேன்.
மேலும் தமிழகத்தில் 59 ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.இதில் 12 மேம்பாலப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
தமிழகத்தில் பழுதான பாலங்கள் எதுவும் இருக்கிறதா என்று சமீபத்தில் நாங்கள் சர்வே எடுத்தோம். ஆனால்அப்படிப்பட்ட பழுதான பாலங்கள் எதுவும் நம் மாநிலத்தில் இல்லை.
மதுரைக்கும் சென்னைக்கும் இடையே ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விரைவில் அறிமுகப்படுத்துவதற்கானஅனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பு வரும்.
விருதுநகர்-ராஜபாளையம் இடையிலான அகல ரயில் பாதைத் திட்டம் 2003ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும்என்றார் மூர்த்தி.
-->
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications