சென்னையில் ஊர்வலம் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கைது
சென்னை:
சென்னையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க கோட்டை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கானமாணவ, மாணவிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பேச வந்த ஆசிரியர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகம் முழுவதும் அரசுக் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந் நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ், வேன்கள், கார்கள், லாரிகளில் சென்னை வந்தனர்.
தென் மாவட்டங்களில் இருந்து நேற்றே புறப்பட்டுவிட்ட இந்த மாணவர்களின் வாகனங்களை போலீசார் பல்வேறு இடங்களில்நள்ளிரவிலேயே தடுத்து நிறுத்தி அவர்களைக் கைது செய்தனர்.
இதையும் மீறி ஆயிரக்கணக்கான மாணவர்கள் சென்னை வந்துவிட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை மன்றோ சிலையில்இருந்து கோட்டை நோக்கி இன்று காலை ஊர்வலம் புறப்பட்டனர்.
ஆனால், இந்தப் பேரணிக்கு அனுமதி தரப்படவில்லை என்று கூறி அவர்களை போலீசார் தடுத்தனர். இயைடுத்து மாணவ,மாணவிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாணவிகள் கொண்டு வந்திருந்த போர்டுகள், முழகக்கங்கள் அடங்கிய துணி பேனர்களை பெண் போலீசார் பறித்தபோது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையும் மீறி மாணவர்கள் ஊர்வலம் செல்ல முயன்றபோது அவர்களை ஆயிரக்கணக்கான போலீசார் சுற்றி வளைத்தனர். அந்தமாணவ, மாணவிகளைக் கைது செய்தனர்.
பின்னர் போலீஸ் வேன்களில் இந்த மாணவ, மாணவிகளை தள்ளிய போலீசார் அவர்களை காவல் நிலையங்களுக்குக் கொண்டுசென்றனர்.
மாணவர்களுக்கு ஆதரவாக பேச வந்த ஆசிரியர்களை போலீசார் ஓட ஓட விரட்டியடித்தனர்.
இந்தச் சம்பவத்தால் மாநிலம் முழுவதும் அனைத்து அரசுக் கல்லூரிகளையும் இன்று ஒரு நாள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications