சென்னை-ஷார்ஜா விமான கழிவறையில் "ஆக்ஷா பிளேடு": கடத்த முயற்சியா?
சென்னை:
சென்னையிலிருந்து ஷார்ஜா செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் "ஆக்ஷா பிளேடு" கத்திகிடந்தது. இதனால் இந்த விமானத்தைக் கடத்த முயற்சி நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இன்று காலை இந்த விமானம் ஷார்ஜா கிளம்ப தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தின் பணியாளர்கள்அதன் கழிவறையில் சோதனை நடத்தியபோது அங்கு ஒரு துணி கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது அதற்குள்"ஆக்ஷா பிளேடு" இருந்தது.
பிளேடு வெளியே தெரியாத வகையில் துணிக்குள் மறைத்து சுற்றப்பட்டிருந்தது.
இதையடுத்து விமான நிலைய போலீசாருக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். விமான நிலைய போலீசார்விரைந்து வந்து அதைக் கைப்பற்றினர். உடனே விமானத்தில் ஏற்றப்பட்ட அனைத்து சரக்குகளும் பயணிகளின்உடமைகளும் இறக்கப்பட்டன.
மேலும் அந்த விமானத்தில் இருந்த 73 பயணிகளும் உடனே கீழே இறக்கப்பட்டனர்.
பயணிகள் மீண்டும் சோதனையிடப்பட்டனர். அவர்களின் உடமைகளும் மீண்டும் சோதிக்கப்பட்டன. அதன்பின்னர் சுமார் 2 மணி நேர தாமதத்துக்குப் பின் அந்த விமானம் பறக்க அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து அந்தவிமானம் புறப்பட்டுச் சென்றது.
இதனால் அந்த விமானத்தைக் கடத்த முயற்சி நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இன்று இந்தவிமானத்தில் ஷார்ஜா சென்ற அனைத்துப் பயணிகளின் பின்னணி குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications