கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மீண்டும் பந்த்: கல்வீச்சு, கலவரம்
கன்னியாகுமரி:
குஜராத்தில் கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பந்த் நடத்தப்பட்டுவருகிறது.
நேற்றே நாடு முழுவதும் வி.எச்.பி. அழைப்பு விடுத்த பந்த் நடந்து முடிந்துவிட்டது. ஆனால், இந் நிலையில் கன்னியாகுமரியில்மீண்டும் இன்று பந்த் நடத்த பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதற்கு ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, இந்து மக்கள் கட்சி ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நாகர்கோவில் பகுதியில்பா.ஜ.கவுக்கு ஓரளவு செல்வாக்கு இருப்பதால் இந்த தனி பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பந்த்தையொட்டி பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது. இதில் 20 அரசு, தனியார் பஸ்கள் சேதமடைந்தன.மூடப்பட்டிருந்த கடைகள் மீதும் கல்வீசியும், பல தெருக்களில் சிலர் கும்பல் கும்பலாகச் சென்று சோடா பாட்டில்களை வீசிகலவரம் செய்தனர்.
இச் சம்பவங்களால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடைகள்மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அலுவலகங்களின் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இந்த திடீர் பந்ந்தினால் கன்னியாகுமரிக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பெரும் அவஸ்தைக்குள்ளாயினர். இரணியல்உள்ளிட்ட சில ஊர்களில் தீவிரவாதிகளின் உருவ பொம்மைகளை பாரதீ ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொளுத்தினர்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications