மின்சாரம் திருடியது ஆந்திரமா? கர்நாடகமா?
சென்னை:
ஆந்திரம் அல்லது கர்நாடகம் கூடுதல் மின்சாரத்தை எடுத்ததால்தான் தமிழகம் முழுவதும் நேற்று மின்வெட்டுஏற்பட்டதாக தமிழக மின் வாரிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நேற்று காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது. சென்னை முதல் கன்னியாகுமரி வரைஎங்குமே மின்சார வினியோகம் சுத்தமாக இல்லை. இதனால் காலையில் பேன் இல்லாமல் அவதிப்பட்ட தமிழகமக்கள், இரவில் மின் விளக்குகளும் இல்லாமல் நொந்து போயினர்.
இரவு 11 மணி வரை தமிழகமே இருளில் மூழ்கிப் போய் இருந்தது.
சென்னையில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டது. தூத்துக்குடி,எண்ணூ
தென்னக மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே திடீர் மின் வெட்டு ஏற்பட்டதாகத்தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதை சரி செய்யும் பணியில் மின் வாரிய அதிகாரிகள் தீவிரமாகஈடுபட்டனர். சிறிது சிறிதாக மின் வினியோகம் சீரானது.
ஆனால், சீரான மின்சாரம் பிற்பகலில் மீண்டும் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. அப்போது துண்டிக்கப்பட்டமின்சாரம் இரவு 11 மணிக்குத்தான் மீண்டும் வந்தது.
ஆந்திரம் அல்லது கர்நாடக மாநிலங்களில் ஏதாவது ஒன்று கூடுதல் மின்சாரத்தை எடுத்ததால் தான் தமிழகத்தில்மின் தடை ஏற்பட்டதாக தமிழக மின் வாரி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் ஆந்திர மாநிலம் கர்நாடகத்தை குற்றம் சாட்டியுள்ளது. கர்நாடகமோ கேரளா மற்றும் தமிழகத்தையும்குற்றம் சாட்டியுள்ளது.
இரண்டாவது கோடை காலத்தில் சிக்கி அவதிப்பட்டு வரும் தமிழக மக்கள் இந்த திடீர் மின்வெட்டால் மிகவும்அவஸ்தைப்பட்டுவிட்டனர். நல்ல வேளையாக இரவிலாவது மின்சாரம் வந்து மக்களை நிம்மதியாக தூங்கவைத்தது.
இந் நிலையில் நெய்வேலி அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் கடந்த சில வாரங்களாகவே மின் உற்பத்திபாதிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக இந்த நிலை தொடர்கிறது. இதனால், தென்னக கிரிட்டில் போதி அளவு மின்சாரசப்ளை இல்லை என்றும் அதை உணராமல் அனைத்து தென்னக மாநிலங்களும் வழக்கம்போல மின்சாரத்தை உறிஞ்சியதாலும்ஒட்டுமொத்த கிரிட்டே குலைந்துவிட்டதாகவும் சில அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications