புதையலுக்காக நரபலி கொடுக்கப்பட்ட வாலிபர்
சேலம்:
சேலத்தைச் சேர்ந்த பட்டறை உரிமையாளர் புதையலுக்காக நரபலி கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சேலம்-அழகாபுரம் காட்டூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் பட்டறை வைத்துள்ளார். பட்டறையைவிரிவுபடுத்துவது தொடர்பாக தனது வீடு மற்றும் நில ஆவணங்களை அடகு வைப்பதற்காக கடந்த 18ம் தேதிஅவர் வீட்டை விட்டுச் சென்றார்.
ஆனால் அதன் பிறகு வீடு திரும்பாததையடுத்து பேர்லேண்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் செல்வத்தின் பட்டறையில் வேலை பார்க்கும் சீனிவாசன் என்பவர் மூலம் செல்வம் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. அவரைக் கொலை செய்தது ரஜினி என்றும் சீனிவாசன் தெரிவித்தார்.
இதையடுத்து பாண்டிச்சேரியில் ரஜினி பதுங்கியிருப்பது குறித்து அறிந்த போலீஸார் அங்கு விரைந்தனர். ஆனால்அதற்குள் ரஜினி அங்கிருந்து தப்பி விட்டார். செல்வத்தின் மோட்டார் சைக்கிள் மட்டும் சிக்கியது.
இதையடுத்து சீனிவாசனிடம் மீண்டும் விசாரணை நடத்தியதில், ரஜினிக்கு சொந்தமான நிலத்தில் செல்வம்புதைக்கப்பட்டது தெரிய வந்தது. சீனிவாசன் அடையாளம் காட்ட, அங்கிருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.அழுகிய நிலையில் இருந்த செல்வத்தின் கைகளும், கால்களும் கட்டப்பட்டிருந்தன.
ரஜினிக்கு சொந்தமான பாழடைந்த பங்களாவில் புதையல் இருப்பதாகவும், அதை எடுக்க தலைச்சன் ஆண்மகனைபழி கொடுக்க வேண்டும் என்றும் சிலர் கூறியதால் செல்வத்தை ரஜினி கொன்று நரபலி கொடுத்துள்ளதாககூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாகியுள்ள ரஜினியைத் தேடி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications