ஜெ., சசி மீதான டான்சி வழக்கு விசாரணை முடிந்தது: தீர்ப்பு ஒத்திவைப்பு
டெல்லி:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலா ஆகியோருக்கு எதிரான டான்சி வழக்கின்விசாரணை முழுவதும் முடிவடைந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சிறைத் தண்டனை வழங்கி கடந்த திமுகஆட்சியில் அமைக்கப்பட்ட தனி நீதிமன்ற நீதிபதி அன்பழகன் தீர்ப்பளித்தார். இதனால் கடந்த ஆண்டு மே மாதம்நடைபெற்ற இடைத் தேர்தலில் ஜெயலலிதாவால் போட்டியிட முடியாமல் போனது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த விசாரணையின் முடிவில்ஜெயலலிதாவையும் சசிகலவையும் விடுதலை செய்து கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நீதிபதி தினகர்தீர்ப்பளித்தார்.
இதையடுத்து தான் கடந்த பிப்ரவரி மாதம் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார்.
இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த திமுக வழக்கறிஞரான ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி மற்றும் ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ். ராஜேந்திர பிரசாத் மற்றும் நீதிபதி பி. வெங்கடராம ரெட்டி ஆகியோர் கடந்த சிலநாட்களாக டான்சி வழக்கை விசாரித்து வந்தனர்.
இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதமும் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாகநீதிபதிகள் அறிவித்து விட்டனர்.
இதற்கிடையே சர்ச்சைக்குரிய டான்சி நிலத்தை மீண்டும் அரசிடமே ஒப்படைக்க ஜெயலலிதா தயாராக இருப்பதாககடந்த வாரம் அவருடைய வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார் என்பதுநினைவிருக்கலாம்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் மற்றொரு வழக்கில், டான்சி நிலத்தை அரசிடம்திரும்ப ஒப்படைக்கத் தயார் என்று சசிகலாவும் சமீபத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications