திருப்பூரில் இன்றும் கலவரம்: வழிபாட்டுத் தலத்துக்கு தீ வைப்பு, 4 பேர் கவலைக்கிடம்
திருப்பூர்:
கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் நேற்றைய பந்த்தின் போது 3 பேருக்கு கத்திக் குத்து விழுந்தது. இதனால்அங்கு பெரும் பதற்றம் நிலவி வரும் நேரத்தில் இன்று ஒரு வழிபாட்டுத் தலமும் ஒரு பனியன் கிடங்கும் தீ வைத்துஎரிக்கப்பட்டன.
கத்திக் குத்து சம்பவங்களில் காயமடைந்த 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
குஜராத் படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து நேற்று நாடு முழுவதிலும் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் "பாரத் பந்த்"நடந்தது. தமிழகத்தில் திருப்பூரில் மட்டும் பந்த்துக்கு ஆதரவு இருந்தது.
திருப்பூர் பெரிய கடை வீதி, பெரிய தோட்டம் பகுதிகளில் திறந்திருந்த கடைகளை மூடச் சொல்லி இந்துமுன்னனியைச் சேர்ந்தவர்கள் வற்புறுத்தினர். அந்தக் கடைகள் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு சொந்தமானது என்றுதெரிகிறது.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் கடைகள் சூறையாடப்பட்டன. சிலகடைகளுக்கு தீ வைக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலில் பலருக்குக் கத்திக் குத்து விழுந்தது. அவர்கள் திருப்பூர் மற்றும் கோவை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து ஒரு கும்பல் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் நுழைந்து தாக்குதல் நடத்தியது. ஒரு வீட்டிற்கு தீவைத்தது. அப்போது அந்த வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தனர். இதையடுத்து அவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இதில் சில பெண்களும் குழந்தைகளும் காயமடைந்தனர்.
இந் நிலையில் இன்று அதிகாலை ஒரு வழிபாட்டுத் தலத்துக்கு சில விஷமிகள் தீ வைத்தனர். மாணிக்கம்பாளையத்தில்வி.எஸ்.ஏ. நகரில் உள்ள இந்தத் அந்தத் தலம் முழுவதுமாக எரிந்து நாசமானது.
அதே போல பொன்முத்து நகரில் சிறுபான்மைப் பிரிவினருக்குச் சொந்தமான ஒரு பனியன் கிடங்குக்கும் தீவைக்கப்பட்டது. இதில் அந்தக் கிடங்கும் அதில் இருந்த துணிகளும் முழுவதும் எரிந்துபோயின. இதில் பல லட்சம்நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவத்தையடுத்து திருப்பூரில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து அங்கு பலத்த காவல் போடப்பட்டுள்ளது.
இன்று அங்கு அமைதி நிலவினாலும் பலவிதமான வதந்திகளும் புரளிகளும் பரவியவண்ணம் உள்ளன. இதனால்திருப்பூரில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அச்சம் காரணமாக தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள்பள்ளிக்கு அனுப்பவில்லை.
தனியார் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து பதற்றமான இடங்களிலும் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளிலும் சிறப்பு அதிரடிப்படையினர்நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தக் கலவரத்தைத் தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சித் தலைவரின் முயற்சியால் அனைத்துக் கட்சிக் குழுஅமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இன்று மாலை கூடி விவாதிக்க உள்ளது.
வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்போவதாக இந்தக் குழுவில் உள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கலெக்டரிடம் உறுதிமொழி தந்துள்ளனர்.
இந் நிலையில் நேற்றைய கத்திக் குத்து சம்பவங்களில் காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை மோசமாகஇருப்பதாகக் தெரியவந்துள்ளது.
-->
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications