ராமதாஸ் மீது வன்னிய அமைச்சர்கள் கூட்டாக பாயச்சல்
சென்னை:
ஜாதியின் பெயரைச் சொல்லி தமிழகத்தை ராமதாஸ் துண்டாடப் பார்க்கிறார் என 3 வன்னியர் சமுதாயஅமைச்சர்கள் கடும் குற்றம் சாட்டியுள்ளனர்.
என்றும் இல்லாத புதுமையாக மூன்று தமிழக அமைச்சர்கள் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
பிற கட்சிகளில் உள்ள வன்னியர்கள் அனைவரும் அவற்றில் இருந்து விலக வேண்டும் என்று பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதையடுத்து சூடாகிப் போன முதல்வர் ஜெயலலிதா தன்அமைச்சரவையில் உள்ள வன்னியர்களைக் கொண்டு இதற்கு பதில் தந்துள்ளார்.
அமைச்சர்கள் செம்மலை, ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக புள்ளி விவரங்களுடன்வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
- வன்னியர் என்ற ஜாதி உணர்வைத் தூண்டி தமிழக்தைத் துண்டாடப் பார்க்கிறார் ராமதாஸ்.
- தமிழகதில் எந்தக் கட்சியிலும் இல்லாத அளவுக்கு அதிமுகவில் வன்னிய சமுதாயத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்து வருகிறார்.
- இப்போதுள்ள தமிழக அமைச்சர்களில் 3 பேர் வன்னியர்கள். அதிமுகவில் உள்ள 22 எம்.எல்.ஏக்கள் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அரசின் தலைமைக் கொறடாவான நரசிம்மன் ஒரு வன்னியர்.
- ஜாதியின் பெயரால் தமிழகத்தைப் பிரிக்க நினைக்கும் ராமதாஸின் செயல்களை இனியும் சகித்துக் கொள்ள முடியாது.
மக்கள் இனியும் ராமதாஸின் பிரிவினைப் போக்கை பொறுத்துக் கொள்ள முடியாது. வரும் தேர்தலில் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளனர் அமைச்சர்கள்.
முன் ஜாமீன் கோரும் ராமதாஸ்:
இந் நிலையில் ஒரு வழக்கில் மயிலாடுதுறை கோர்ட் பிறப்பித்துள்ள பிடி வாரண்ட்டிலிருந்து தப்ப முன் ஜாமீன் கேட்டு சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.
வேதாகமப் பள்ளிகளை அரசு ஆரம்பித்தால் அவற்றை குண்டு வீசித் தாக்குவோம் எனப் பேசியதாக ராமதாஸ் மீது பல ஆண்டுகளுக்குமுன் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆஜராகுமாறு மயிலாடுதுறை கோர்ட் ராமதாஸுக்கு உத்ரவிட்டது. ஆனால்ராமதாஸ் ஆஜராகவில்லை.
இதையடுத்து அவரைப் பிடிக்க போலீசாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம். இந் நிலையில் பிடிவாரண்ட்டில் இருந்து தப்பராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதை விசாரித்த நீதிபதி முருகேசன், இன்னும் 15 நாட்களுக்குள் மயிலாடுதுறை விசாரணை கோர்ட்டில் ராமதாஸ் ஆஜராக வேண்டும்.அன்றைய தினத்தில் ராமதாஸின் கோரிக்கையை தகுதி அடிப்படையில்மயிலாடுதுறை கோர்ட் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தனது சார்பில் ஒருவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதாகவும், அதுவரை முன் ஜாமீன் வழங்குமாறும் ராமதாஸ் கோரியதை நீதிபதி ஏற்கமறுத்துவிட்டார்.
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications