நாளை தமிழக ரயில்களை குறிவைத்து மறியல் போராட்டம்: கோவை ரயில் ரத்து
பெங்களூர்:
தமிழகத்துக்கு காவிரியில் நீர் விடக் கூடாது என்று வலியுறுத்தி நாளை பெங்களூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்த கன்னட அமைப்புகள்திட்டமிட்டுள்ளன. இதையடுத்து பெங்களூர்- கோயம்புத்தூர் இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நாளை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை தமிழகத்துக்கான பிற ரயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்படும் அபாயம்உள்ளது.
தமிழர்களை தீவிரவாக எதிர்த்து வரும் கன்னட சாளுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், தமிழர் மீதான தாக்குதலில் முக்கிய பங்குவகிக்கும் நாராயண குமார் ஆகியோரின் தலைமையில் இந்தப் போராட்டம் நடக்கிறது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள இதற்காக மாண்டியா, மைசூர், பெங்களூர் ஊரக மாட்டங்களில் இருந்து டிராக்டர்கள், லாரிகள்,வேன்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாளை பெங்களூர் வருவார்கள் என விவசாயிகள் சங்கத் தலைவர் புட்டண்ணா கூறியுள்ளார்.
மெஜஸ்டிக் ரயில் நிலையம், கண்டோன்மென்ட், ஒயிட் பீல்ட், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையஙகளில் நுழைந்து ரயில்களைத்தடுப்போம் என இவர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே மாண்டியா, மைசூரில் தொடர்ந்து இவர்கள் நடத்தி வரும் ரயில் மறியலால் அந்தப் பகுதியில் ரயில்போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
பஸ்களையும் அவ்வப்போது தடுத்து வருவதால் அப் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இந் நிலையில் வாட்டாள் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளார். குறிப்பாக தமிழகத்தில் இருந்து வரும் ரயில்களை இந்தக்கும்பல்கள் குறி வைக்கலாம்.
இதையடுத்து நாளை கோவையில் இருந்து பெங்களூர் வரும் ரயிலும் பெங்களூரில் இருந்து கோயமபுத்தூர் செல்லும் ரயிலும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில் காலை 5.15 மணிக்குப்பதிலாக காலை 11.00 மணிக்குத் தான் கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமூக விரோதிகள் தமிழகத்தில் இருந்து வரும் பிற ரயில்களைத் தாக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் அவற்றுக்கு போதிய பாதுகாப்பு தரவேண்டும்.
ஆனால், கர்நாடக அரசு இந்தப் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. இதனால் தமிழக பயணிகள்பயணத்தை ஒத்தி வைப்பது அல்லது பஸ்களில் பெங்களூர் வருவது நல்லது.
-->
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications