பெங்களூரில் இமாம் அலி சுட்டுக் கொலை
பெங்களூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து கடந்த மார்ச் 7ம் தேதி போலீசாரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றஅல்-உம்மா தீவிரவாதியான இமாம் அலியை பெங்களூரில் தமிழகப் போலீசார் இன்று அதிகாலை சுட்டுக்கொன்றனர். அவனுடன் ஒரு பெண் உள்பட வேறு 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலூரைச் சேர்ந்த 32 வயதான இமாம் அலி தன்னுடைய கூட்டாளியான ஹைதர் அலியுடன் கடந்த மார்ச் 7ம்தேதி திருமங்கலம் போலீஸ் நிலையம் வாசலில் வேனில் வைக்கப்பட்டிருந்த போது தப்பி விட்டனர்.
டாடா சுமோ வேனில் வந்த வேறு சில தீவிரவாதிகள் போலீஸ் நிலையத்தில் குண்டுகளை வீசிவிட்டு இமாம்அலியையும் ஹைதர் அலியையும் தப்பிக்க வைத்தனர்.
அடுத்த ஒரு வாரத்திலேயே சிவகங்கையில் வைத்து ஹைதர் அலியைப் போலீசார் கைது செய்தனர். ஆனால் இமாம்அலி மட்டும் தொடர்ந்து தலைமறைவாகி இருந்தான். நாடு முழுவதும் அவனைப் போலீசார் சல்லடை போட்டுத்தேடி வந்தனர்.
இந்நிலையில் அவனை பெங்களூரில் மோப்பம் பிடித்த தமிழகப் போலீசார் இன்று அதிகாலை அவன் தங்கியிருந்தவீட்டைச் சுற்றி வளைத்தனர். பெங்களூர் சஞ்சய் நகரில் உள்ள ஒரு வீட்டில் அவனுடன் வேறு சில தீவிரவாதிகளும்அங்கிருந்தனர்.
தீவிரவாதிகளை வெளியே கொண்டு வருவதற்காகக் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை போலீசார் எறிந்தனர். இதைத்தொடர்ந்து இமாம் அலி உள்ளிட்ட தீவிரவாதிகள் பதிலுககுத் துப்பாக்கிகளால் போலீசாரை நோக்கிச் சுட்டனர்.
இதையடுத்து தமிழகப் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டைநடைபெற்றது.
இதில் போலீசார் அவர்கள் அனைவரையும் சுட்டுக் கொன்றனர். பின்னர் வீட்டைச் சோதனையிட்ட போது இமாம்அலி, ஒரு பெண் உள்பட ஐந்து பேர் குண்டு பாய்ந்து பிணமாகக் கிடந்தனர்.
ஐந்து பேரின் உடல்களும் உடனடியாக பெங்களூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஏ.கே.47 உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களையும் போலீசார் கைதுசெய்தனர். அந்த வீட்டிற்குச் சொந்தக் காரர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இமாம் அலி உள்ளிட்ட தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்ற தமிழகப் போலீசாரை தமிழக முதல்வர்ஜெயலலிதா பாராட்டினார். தமிழகப் போலீசாரின் வீரதீரச் செயலுக்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு என்றுஜெயலலிதா கூறினார்.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications