சுடுகாட்டில் சிசுக்களை வீசியவர் ஆண்டிப்பட்டி டாக்டர்
மதுரை:
ஆண்டிப்பட்டி சுடுகாட்டில் பாட்டிலில் அடைக்கப்பட்டு வீசப்பட்ட 11 சிசுக்களை போட்டது யார் என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக டாக்டர் ஒருவர் அவராகவே போலீஸில் ஆஜராகி நடந்தவற்றைக் கூறியுள்ளார்..
முதல்வர் ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டியில் உள்ள சுடுகாட்டில், சில நாட்களுக்கு முன்பாட்டில்களில் அடைக்கப்பட்ட 11 சிசுக்களின் ஸ்பெசிமென்கள் வீசப்பட்டிருந்தன.
இது தமிழகத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது. அதை வீசியது யார் என்று போலீஸார் சல்லடை போட்டுவிசாரித்துக் காண்டிருந்தனர்.
இந் நிலையில் அந்த சிசுக்களை வீசியவர் டாக்டர் நாராயண சாமி என்று தெரியவந்தது.
அவராகவே ஆண்டிப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.
அதில், தான் நடத்தி வரும் கிளினிக்கில் கடந்த 15 ஆண்டுகளாக இந்த சிசுக்களை வைத்திருந்தாகவும், சிலஆய்வுகளையும் நடத்தி வந்ததாகவும், இப்போது அவை தேவையில்லை என்பதால் சுடுகாட்டில் வீசிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிசுக்கள் வீசப்பட்ட செய்தி வெளியானதும் அதுகுறித்து போலீஸில் தெரிவிக்க நினைத்ததாகவும் ஆனால் என்னநடவடிக்கை எடுப்பார்களோ என்று பயந்து தெரிவிக்காமல் விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார் டாக்டர் நாராயணசாமி.
இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications