தஞ்சை, நாகை, திருவாரூரில் பந்த்: ஸ்தம்பித்தது இயல்பு வாழ்க்கை
தஞ்சாவூர்:
கர்நாடகத்திலிருந்து உடனடியாக காவிரி நீரைத் திறந்து விடக் கோரி காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களானதஞ்சாவூர், நாகப்பட்டனம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு நடந்து வருகிறது.
இதனால் இந்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் சங்கம் இதற்கு அழைப்பு விடுத்துள்ளது. பல்வேறு விவசாய அமைப்புகள், வர்த்தகஅமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவை இந்த பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் காவிரி தொடர்பான வழக்கு விசாரணை இன்று வருவதால் பந்த் நடத்த வேண்டாம் என்றுமுதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும் இன்று காலை முதல் திட்டமிட்டபடி பந்த் நடந்து வருகிறது.
கர்நாடகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் இந்த 3 மாவட்டங்களிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தமாவட்டங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பஸ் போக்குவரத்துநிறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சாவூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை இன்று புறக்கணித்தனர்.இதனால் நீதிமன்றப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன.
சூரக்கோட்டையில் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர். பட்டுக்கோட்டை தாளியமங்கலத்தில் சாலைமுழுவதும் மரங்களை வெட்டிப் போட்டு விவசாயிகள் போராட்டம் நடத்துவதால் தஞ்சாவூருக்கான போக்குவரத்துமுழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளன. தங்கள் வாழ்வுரிமைக்காக் போராடிவரும் விவசாயிகளைக் கைது செய்திருப்பதை விவசாயிகள் சங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
நீடாமங்கலத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல அம்மாபேட்டை, நீடாமங்கலம், திருவைய்யாறு ஆகிய இடங்களில் ஆட்டோ ஓட்டுனர்களும்விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினர்.
குடவாசல், நாகப்பட்டிணம் ஆகிய இடங்களிலும் விவசாயிகளும் பொது மக்களும் கர்நாடகத்துக்கு எதிராகஆர்பாட்டம் நடத்தினர்.
இந்த பந்த் காரணமாக 3 மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications