அக்.8 முதல் மீண்டும் கல்லூரி ஆசிரியர் வேலை நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் வரும் அக்டோபர் 8ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கக் கூடாது என்று கோரி ஆசிரியர்களும், மாணவர்களும்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இடையில் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவேஆசிரியர்கள் மட்டும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் தான் கூறிய உறுதிமொழிகளை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்று கூறும் ஆசிரியர்கள்மீண்டும் அக்டோபர் 8ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக திருச்சியில் நடந்த அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications