பசு மாடுகளை விஷம் வைத்துக் கொன்ற பாதிரியார்
விருதுநகர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பசு மாடுகளை விஷம் வைத்துக் கொன்றதாக ஒரு பாதிரியார் மீதும் அவரது பெண்உதவியாளர் மீதும் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மா. புதுப்பட்டியில் உள்ள ஒரு சர்ச்சில் பாதிரியாராகஇருப்பவர் மரிய ஞானம். இவரது பெண் உதவியாளர் ஜெயசீலி.
சர்ச்சிற்கு அருகே வசிக்கும் சமாதானம்-கலைச்செல்வி தம்பதியரின் மூன்று பசு மாடுகளும் புல் சாப்பிட்ட பிறகுதிடீரென்று இறந்தன. இதனால் அதிர்ச்சியடைந்தார் சமாதானம்.
மரிய ஞானத்தின் உத்தரவின் பேரில் ஜெயசீலிதான் புல்லில் விஷம் கலந்து விட்டதாக சந்தேகமடைந்தார்சமாதானம். இதையடுத்து ஊர் மக்களிடம் இதுகுறித்துக் கூறினார்.
உடனடியாக ஊர் மக்கள் ஒன்று திரண்டு, இறந்த பசு மாடுகளுடன் சர்ச் முன்பு திரண்டனர். பாதிரியார் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீஸிலும் புகார் கொடுக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து மக்களை சமாதானப்படுத்தி ஒரு மாட்டை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
பாதிரியார் மற்றும் ஜெயசீலி ஆகியோர் மீது மாடுகளை விஷம் வைத்துக் கொன்றதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications