"ஹைடெக்" கிரிக்கெட் சூதாட்டம்: 9 பேர் கைது
சென்னை:
இலங்கையின் கொழும்பில் இன்று நடைபெறும் ஐ.சி.சி. கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறப்போவது இந்தியாவா, இலங்கையா என்பது குறித்து சென்னையில் சூதாட்டம் நடத்திய 4 இன்டர்நெட் மையஅதிபர்கள் உள்ளிட்ட 9 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
இங்கு ரூ. 15 கோடி அளவுக்கு சூதாட்டம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகள் கொழும்பில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த இறுதிப் போட்டியில்இந்திய-இலங்கை அணிகள் மோதின. ஆனால் பாதியிலேயே மழை வந்ததால் போட்டி கைவிடப்பட்டு இன்றுநடந்து வருகிறது.
இந்நிலையில் ஐ.சி.சி. போட்டிகளை வைத்து சென்னையில் "ஹைடெக்" சூதாட்டம் நடைபெற்று வந்துள்ளது.அண்ணாநகர், தியாகராய நகர் மற்றும் மாம்பலம் போன்ற பகுதிகளில் இ-மெயில் மூலமாக இந்தச் சூதாட்டம் படுஜரூராக நடந்தது.
சூதாட்டம் நடப்பது குறித்துப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை மாநகரப் போலீஸ்கமிஷனர் விஜயகுமாரின் உத்தரவின் பேரில், இணை கமிஷனர் சைலேந்திரபாபு தலைமையிலான போலீசார்இன்று காலை குறிப்பிட்ட இன்டர்நெட் மையங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஏராளமானவர்கள் இந்தச் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து நான்குஇன்டர்நெட் மைய அதிபர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரைப் போலீசார் கைது செய்தனர்.
மேலும் சூதாட்டப் பணம் ரூ.19,000-த்தையும், 34 செல்போன்களையும், லேப்டாப்கள் உள்பட பலகம்ப்யூட்டர்களையும், சூதாட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சாப்ட்வேர் அடங்கிய சி.டிக்களையும் மற்றும் சிலஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர்.
இந்த ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகளின் போது நடந்த சூதாட்டங்களில் மட்டும் சுமார் ரூ.15 கோடி வரை பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. நேற்றைய போட்டியில் மட்டும் ரூ.1 கோடி வரை சூதாட்டம்நடந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் சூதாட்டக்காரர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். அபராதம் கட்டிய பின்னர் அவர்கள்விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications