டெல்லி பயணத்தை ரத்து செய்தார் ஜெ
டெல்லி:
பிரதமர் வாஜ்பாயைக் கண்டித்து தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்த முதல்வர் ஜெயலலிதாதன்னுடைய டெல்லி பயணத்தையும் ரத்து செய்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் அதற்காக அமைக்கப்பட்ட நதி நீர் ஆணையம் சரியாகச் செயல்படாத காரணத்தால் அந்தஆணையமே தேவையில்லை என்று ஜெயலலிதா கூறி வருகிறார்.
இந் நிலையில் ஜெயலலிதாவும் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றுசமீபத்தில் வாஜ்பாய் கூறியிருந்தார். கிருஷ்ணாவும் பேச்சு நடத்தத் தயார் என்று கூறியுள்ளார்.
ஆனால் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜெயலலிதா அவர்கள் இருவருக்கும் சூடாகப்பதிலளித்து விட்டார். நேற்று வெளியிட்ட அறிக்கையிலும் அவர் பிரதமரைக் காரசாரமாக விமர்சித்து இருந்தார்.
இந் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக தலைவர்களான அண்ணாதுரை, சத்தியமூர்த்தி மற்றும்முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் சிலை திறப்பு விழா நாளை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இன்றுடெல்லி செல்லத் திட்டமிட்டிருந்த ஜெயலலிதா, அந்தப் பயணத்தை ரத்து செய்து விட்டார்.
அவருக்குப் பதிலாக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்னையன் ஆகியோர் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
வாஜ்பாய்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் டெல்லி சென்றுள்ள கிருஷ்ணாவை சந்திப்பதைத் தவிர்க்கவுமேஜெயலலிதா இந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications