நாளை காஷ்மீரில் 3வது கட்டத் தேர்தல்
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் மூன்றாவது கட்டத் தேர்தல் நாளை நடக்கிறது. இதையடுத்து தீவிரவாதிகளின் வன்முறையையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது பாகிஸ்தான்.
தீவிரவாதிகளை மீறி பலத்த பாதுகாப்புடன் தேர்தலை நடத்த வேண்டி இருப்பதால் 4 கட்டமாக வாக்குப் பதிவுபிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத் தேர்தலில் 27 தொகுதிகளிலும் 2வது கட்டத் தேர்தலில் 26 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது
கடந்த 2 கட்டத் தேர்தல்களும் மிக பலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்தன. பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கவில்லை. முதல்கட்டத் தேர்தலில் 47 சதவீத வாக்குப் பதிவும் இரண்டாவது கட்டத் தேர்தலில் 42 சதவீத வாக்குகளும் பதிவாயின.
இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் குஜராத் கோவில் மீது தாக்குதலை நடத்தச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் 27 தொகுதிகளுக்கு நாளை 3வது கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் 226 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.மொத்தம் 17.81 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளன.
அனந்த்நாக், உதம்பூர், கதுவா, புல்வாரா ஆகிய தீவிரவாதிகள் செயல்பாடு நிறைந்த 4 மாவட்டங்களில் இந்த 27 தொகுதிகளும்உள்ளன. இதனால் ராணுவம், பி,எஸ்.எப், இந்தோ-திபெத் போலீஸ், சி.ஆர்.பி.எப், சி.ஐ.எஸ்.எப், கமாண்டோக்கள், போலீசார்என அனைத்து வகையான பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 2,000 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்க பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். அமைச்சர் பசீர் அகமத் மீது நேற்று தீவிரவாதிகள் கிரனைட் குண்டுத் தாக்குதல் நடத்தினர். ஆனால், அவர்தப்பிவிட்டார்.
மத்திய கூட்டணியில் இருந்து பரூக் விலகல்:
இந் நிலையில் தேர்தலின் முடிவு எப்படி இருந்தாலும் மத்திய பா.ஜ.க. கூட்டணிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறமுதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி முடிவு செய்துவிட்டது.
இது குறித்து பரூக்கின் மகனும் மத்திய வெளியுறவுறத்துறை இணை அமைச்சருமான ஒமர் அப்துல்லா நிருபர்களிடம் கூறுகையில்,
தேர்தல் முடிந்தவுடன் கூட்டணியில் இருந்து விலகுவோம். நான் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்.
குறைந்தபட்சம் 44 தொகுதிகளை வென்று மீண்டும் காஷ்மீரில் ஆட்சியைப் பிடித்துவிடுவோம். அப்படி இல்லாவிட்டால் எதிர்க்கட்சியாக போய் சட்டசபையில் உட்காருவோம் என்றார்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications