மாறன் தொடர்ந்து "சீரியஸ்": சுய நினைவுடன் உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லைஎன்றாலும் அவர் தற்போது செயற்கை சுவாசம் மூலம் சுவாசித்து வருகிறார் என்றும் சுய நினைவுடனே உள்ளார்என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 23ம் தேதி காய்ச்சல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மாறன்.கடந்த ஜூலையில் அவருக்கு டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் நடந்த இருதய அறுவைச் சிகிச்சையின்போது பொருத்தப்பட்ட செயற்கை இருதய வால்வில் பூஞ்சைத் தாக்குதல் ஏற்பட்டதைத் தொடர்ந்தே அவருக்குக்காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மீண்டும் ஒரு அறுவைச் சிகிச்சைசெய்யப்பட்டு, வேறு ஒரு புதிய இருதய வால்வு பொருத்தப்பட்டது.

ஆனால் அதற்குள் அந்தப் பூஞ்சைத் தாக்குதல் அவருடைய இரத்த ஓட்டத்தில் கலந்து விட்டதால் மாறனின்நுரையீரல், கிட்னி போன்ற உறுப்புகளும் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து மூச்சு விடுவதற்குக் கூட மாறனுக்கு சிரமம் ஏற்பட்டிருப்பதால் செயற்கை சுவாசம் அவருக்குஅளிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, ஆந்திராவிலுள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள சிறப்பு சிறுநீர் சுத்திகரிப்புகருவி மூலம் மாறனுக்கு 12 மணி நேர சிறுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும் மிகவும் அதி நவீனமருந்துகளும் அவருக்குக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இவற்றைத் தவிர அமெரிக்கா, இங்கிலாந்தில் உள்ள பல தொற்று நோய் நிபுணர்களிடமும் இருதய நோய்நிபுணர்களிடமும் அப்பல்லோ டாக்டர்கள் தொடர்ந்து ஆலோசனை பெற்று மாறனுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தாலும், மாறன் சுய நினைவுடனே உள்ளதாகடாக்டர்கள் தெரிவித்தனர். கொச்சியைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீலேகா கோபிநாத்தும் மாறனுக்கு சிகிச்சை அளிக்கும்டாக்டர்கள் குழுவுக்கு உதவ முன் வந்துள்ளார்.

இதற்கிடையே, மாறன் உடல் நிலை குறித்து பிரதமர் வாஜ்பாய் அடிக்கடி திமுக தலைவர் கருணாநிதியுடன் தொடர்புகொண்டு விசாரித்து வருகிறார்.

மாறனுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் சத்ருஹன் சின்ஹாவுக்கும் வாஜ்பாய் உத்தரவிட்டுள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+