அரசை எதிர்த்துப் போராட்டம்: 8,000 மார்க்சிஸ்ட் தொண்டர்கள் கைது
சென்னை:
தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கக் கோரி மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களை முடக்கமுயன்ற இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுமார் 8,000 தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழக, மத்திய அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தான் எண்ணற்ற தமிழக மக்கள்வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளனர் என்று சென்னை போராட்டத்தில் கலந்து கொண்டஅக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் வரதராஜன் குற்றம் சாட்டினார்.
சென்னையில் அவர் தலைமையிலான சுமார் 3,000 தொண்டர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன் போராட்டம்நடத்தினர். இதையடுத்து வரதராஜன், எம்.எல்.ஏவான மகேந்திரன் உள்ளிட்ட அனைத்து மார்க்சிஸ்ட்தொண்டர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இதே போல் மதுரை எம்.பியான மோகன், எம்.எல்.ஏவான நன்மாறன் உள்ளிட்ட சுமார் 2,000 மார்க்சிஸ்ட்தொண்டர்கள் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும், 2,000 தொண்டர்கள் கோயம்புத்தூர்மாவட்டத்திலும் 100 பெண் தொண்டர்கள் உள்ளிட்ட 500 பேர் சேலம் மாவட்டத்திலும் கைது செய்யப்பட்டனர்.
பெரும்பாலான தொண்டர்கள் அரசு அலுவலகங்களை செயல்பட விடாமல் தடுக்க முனைந்த போதும், சேலம்மாவட்ட தொண்டர்கள் சாலை மறியல் செய்த போதும் கைதாகினர். சாலை மறியல் போராட்டம் நடந்த இடங்களில்போக்குவரத்து சிறிது நேரத்திற்குப் பாதிக்கப்பட்டது.
மதுரையில் நடந்த போராட்டத்தின் போது பேசிய மோகன், தமிழக அரசுக்கு திமுக உருப்படியான யோசனையைஅளிக்கத் தவறி விட்டது என்றும் குற்றம் சாட்டினார்.
ரேஷன் கடை அரிசி விலை உயர்வு, மத்திய அரசின் தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல அரசு நடவடிக்கைகளைஎதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று போராட்டம் நடத்தியது.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications