பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் ஒரு லிட்டருக்கு 25 பைசா வரை உயர்ந்தன. இன்று நள்ளிரவுமுதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

சென்னையில் ரூ.32.16க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.32.42ஆக உயர்கிறது.

அதேபோல் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை டெல்லியில் ரூ.29.91ஆகவும், மும்பையில் ரூ.33.42ஆகவும்,கொல்கத்தாவில் ரூ.31.35ஆகவும் உயர்த்தப்படுகிறது.

இந்நிலையில் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு சென்னையில் ரூ.20.81ஆகவும், டெல்லியில் ரூ.18.68ஆகவும்,மும்பையில் ரூ.23.97ஆகவும், கொல்கத்தாவில் ரூ.20.30ஆகவும் அதிகரிக்கிறது.

சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் பல மடங்கு உயர்ந்ததைத் தொடர்ந்து, இந்தியபெட்ரோலிய நிறுவனங்களும் இவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்குத்தள்ளப்பட்டுள்ளதாக நேற்று தான் பெட்ரோலியத்துறை அமைச்சரான ராம் நாயக் பாட்னாவில் நிருபர்களிடம்கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+