நாங்கள் சும்மா இருக்கிறோமா?- ஜெ.வுக்கு பா.ம.க. பதில்
திருச்சி:
காவிரிப் பிரச்சினையில் விவசாயிகளின் நலனுக்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடிக் கொண்டுதான் உள்ளது என்று அக்கட்சியைச் சேர்ந்த மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் என்.டி.சண்முகம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள 10 அமைச்சர்களும் காவிரிப் பிரச்சினையில் கண்டுகொள்ளாமல் உள்ளதாகமுதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதில் உண்மையில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை எங்களது தலைவர் டாக்டர் ராமதாஸ், பிரதமர் வாஜ்பாயைடெல்லியில் சந்தித்துப் பேசியுள்ளார்.
எங்களது எம்.பிக்கள் குழுவும் பெங்களூர் சென்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவைச் சந்தித்து கோரிக்கைவிடுத்துள்ளது.
ஜெயலலிதா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், டெல்லி சென்ற குழுவிலும் எங்களதுகட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். எனவே பாமகவை இந்தப் பட்டியலில் முதல்வர் சேர்த்திருப்பதுசரியல்ல என்றார் சண்முகம்.
அரிசி விலை- பாமக போராட்டம்:
இதற்கிடையே ரேஷன் அரிசி விலை உயர்வைக் கண்டித்து சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் பாட்டாளி மக்கள்கட்சி சார்பில் கண்டனப் போராட்டங்கள் நடந்தன.
இன்று முதல் 5ம் தேதி வரை இப்போராட்டத்தை நடத்துகிறது பாட்டாளி மக்கள் கட்சி. சென்னையில் அக்கட்சித்தலைவர் ஜி.கே. மணி தலைமையில் கிண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிருபர்களிடம் மணி பேசுகையில், இந்தப் போராட்டங்களுக்கு பொதுமக்களும் நன்றாக ஆதரவுஅளித்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே மக்களையும் நாங்கள் அழைத்துக் கொண்டு இனி ரேஷன் கடைகளின் முன்பாகவே போராட்டம் நடத்தப்போகிறோம் என்றார்.
பாமக தொண்டர்கள் அதிகம் உள்ள தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட பல வட மாவட்டங்களிலும் இப்போராட்டம்நடந்தது.
முன்னதாக நேற்று மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே விவசாயிகளும் ஏழை மக்களும் வறட்சிமற்றும் வறுமை காரணமாக வாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ரேஷன் அரிசியின் விலையை ஏற்றியதுஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும்.
இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் 30ம் தேதி (இன்று) முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பா.ம.க. சார்பில்போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் மணி.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications